கிறிஸ்தவமா இஸ்லாமா என்கிற உங்கள் கேள்வியை முன்னெடுக்கும் விதமாக, சர்ச்சைக்குரிய இரண்டு கேள்விகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 1. இயேசு உண்மையான தீர்க்கதரிசியா அல்லது கள்ளத் தீர்க்கதரிசியா? 2. உங்களுக்கு மறுபடியும் பிறந்த அனுபவம் உண்டா?
இயேசு, தான் தேவனுடைய குமாரன் என்றும் தன்னுடன் பரலோகத்தில் என்றென்றும் வாழ விரும்புகிறவன் கண்டிப்பாக மறுபடி பிறக்க வேண்டும் என்றும் வெளிப்படையாகக் கூறினார். நண்பர்களே, “கிறிஸ்தவமே உண்மையான வழி என்பதை என்னால் எவ்வாறு அறிய முடியும்? என்பது சரியான கேள்வியல்ல. சரியான கேள்வி “இயேசு உண்மையான தீர்க்கதரிசியா? உங்கள் பதிலுக்குப் பின்னர், பின்வரும் தனிப்பட்ட கேள்வி தொடரும்: “நான் மறுபடி பிறந்திருக்கிறேனா?” இவையே சரியான கேள்விகளாகும்.
யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
கிறிஸ்தவமும் இஸ்லாமியமும் கூறுகிறபடி இயேசு உண்மையான தீர்க்கதரிசியாக இருந்தால், அவர் பூமியில் வாழ்ந்த காலம் முழுவதும் பொய் கூறவில்லை என்பது உண்மை.
- யோவான் 10:23-30 இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
இயேசு பின்வரும் உண்மைகளைக் கூறினார்:
யோவான் 3:3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மத்தேயு 18:2-3 இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து: அதை அவர்கள் நடுவே நிறுத்தி: நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இயேசு கூறியது உண்மையாக அல்லது பொய்யாக இருக்க வேண்டும். உண்மை தீர்க்கதரிசியான இயேசுவின் வார்த்தைகள் நிச்சயமானவையாக, உண்மையானவையாக இருக்க வேண்டும், இல்லையெனில் அவர் கள்ளத் தீர்க்கதரிசியாகிவிடுவார். கள்ளத் தீர்க்கதரிசி பாவத்தால் நிறைந்தவன். பாவமில்லாத மனிதன் மட்டுமே பிறரின் பாவங்களுக்காகத் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பலியாக முடியும்.
இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கூறப்படுவனவற்றுள் எது உண்மை என நம்புகிறீர்கள் என்பது நித்தியத்திற்குரிய முக்கியமான ஒரு கேள்வி. அது கிறிஸ்தவமா Vs இஸ்லாமா என்பது அல்ல. உங்கள் கேள்விக்கான சரியான, தெளிவான, பதில் பின்வரும் தனிப்பட்ட கேள்வியின் மூலம் கிடைக்கும். “அன்புள்ள நித்திய ஆத்துமாவே, வேதாகமத்தில் இயேசு தன்னைக் குறித்து கூறியவற்றை நீ நம்புகிறாயா? நீ மறுபடி பிறந்திருக்கிறாயா?
நீங்கள், நீங்கள் மட்டுமே மேற்கண்ட இரண்டு கேள்விகளுக்குமான பதிலை அறிவீர்கள். இப்பூமியில் ஒருவன் இயேசுவை விசுவாசிக்கிறானா என்பதையும் அவன் நித்திய வாழ்வுக்குக்கென்று இரட்சிக்கப்பட்டானா என்பதையும் மற்ற யாராலும் அறிய முடியாது. ஒருவன் “புதிதாய் பிறந்தான்” என்பதை தேவன் அவனும் மாத்திரமே அறிவார்கள்.
ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் பொழுது, அவர் தேவகுமாரன் என்றும் கிறிஸ்தவமே சரியான பாதை என்றும் விசுவாசிப்பதற்காக, அவன் முதலில் ஆவிக்கேற்றபடி “மறுபடி பிறந்திருக்க” வேண்டும்.
பின்வரும் வரலாற்று உண்மைகளின் கருத்துரை:
மேற்கண்ட உண்மை அனைத்தும் வரலாற்றுக் குறிப்புகளே என்பதைத் தெளிவாக புரிய முடிகிறது, இவற்றால், இயேசு இப்பூமியில் வாழ்ந்த பொழுது தன்னைக் குறித்துச் சொன்னபடியே அவர் தேவனின் குமாரன்தான் என்று யாரும் நம்பவில்லை. ஏன்? ஏனெனில் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தல் என்பது மனதை மட்டும் உள்ளடக்கியதல்ல, விருப்பத்தையும் உணர்ச்சிகளையும் உள்ளடக்கியது (ஆளுமை).
உண்மை: இயேசு தேவகுமாரன் என்பது நிச்சயம் அல்லது இதுவரை வாழ்ந்தவர்களில் அவர்தான் மிகப்பெரிய பொய்யராக இருக்க வேண்டும் மற்றும் அவருடைய அற்புதமான செயல்களை மட்டுமல்ல, அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பின் அவரை உயிருடன் கண்ட ஆயிரக்கணக்கான சாட்சிகளை எப்படியோ ஏமாற்றினவனாக இருக்க வேண்டும்.
யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
இயேசு உண்மையான தீர்க்கதரிசியாக அல்லது கள்ளத்தீர்க்கதர்சியாக இருக்க வேண்டும். இவ்விரண்டுமாக அவர் இருக்க முடியாது. வேதாகமமும் குரானும் இயேசு உண்மையான தீர்க்கதரிசி என்று அறிவிக்கின்றன. இயேசு, உண்மையான தீர்க்கதரிசி என்பது நிச்சயமானால் அவர் கூறியது அனைத்தும் உண்மைதான். மேற்கண்ட தொடர் உண்மையாக அல்லது பொய்யாக இருக்கலாம்! இயேசு, தேவகுமாரனாக, முழு மனிதனாகத் தன் புனிதத் தன்மையை நிரூபிப்பதற்காக, மூன்று ஆண்டுகள் ஜனங்களுடன் வாழும்பொழுது பேசும்பொழுதும் மிகப் பரந்த, இயற்கைக்கு அப்பாற்பட்ட ஞானத்தை வெளிப்படுத்தினார். மனிதனால் என்றுமே உண்மையாகச் செய்ய முடியாத அற்புதங்களைச் செய்தார்.
இவ்வாறு, இயேசு கிறிஸ்துவைக் குறித்தவற்றுள் எது உண்மையென நம்புகிறீர்கள் என்பது மிக முக்கியமான விஷயம், இது எப்பொழுதும் சிந்திக்க கூடியது! ஆனால் பின்வருவனவும் உண்மையானது தான். இயேசுவைக் குறித்த உண்மையை – அவருடைய தியாகம் மற்றும் பாவமுள்ள மனித இனத்திற்காக அவர் மரித்தது, பிதாவாகிய தேவன் நம்மை நேசிக்கிறார் – ஒருவன் விசுவாசிக்கும் முன் ”மறுபடி பிறக்க” வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்றுவது (கிறிஸ்தவம்) சரியான வழி என்பதை இவ்வுண்மை நிலை நாட்டுகிறது.
வரலாற்று உண்மைகள்: மீண்டும், உண்மைகள் சத்தியத்தை விசுவாசிக்கும்படி இருதயத்தைச் சமரசப்படுத்துவதில்லை, ஆனால் அவை அச்சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படி இருதயத்தை மென்மையாக்குகிறது. உண்மைகள் ஒருவனையும் சமரசப்படுத்தவில்லை எனினும் இயேசுவைக் குறித்த சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும்படி உங்கள் இருதயங்கள் திறக்கும்படி அவற்றை ஆயத்தப்படுத்த உதவுமென்ற நம்பிக்கையுடன் நாம் சில உண்மைகளை ஆராய்வோம்.
பல்லாண்டுகளுக்கு முன் இரு மனிதர் வாழ்ந்து, பின் மரித்தனர். வரலாறு இவ்வாறு கூறுகிறது: 1. இயேசு இஸ்ரவேல் எருசலேமில் ஏப்ரல் மாதம் கிபி 30-ல் மரித்தார். 2. முகம்மது சவுதி அரேபியாவில் மெதினாவில் ஜூன் மாதம் கிபி 632 இல் மரித்தார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட வேண்டுமென்று ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்து தீர்ப்பு வழங்கினான்.
சிலுவையில் இயேசுவின் தலைக்கு மேல் ”நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா” என்ற மேல் விலாசத்தை எழுதி வைக்கும்படிப் பிலாத்து சேவகர்களுக்குக் கட்டளையிட்டான் யோவான் 19:19.
சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்ட பின்னர், இயேசு ஆறு மணி நேரங்கழித்து மரணமடைந்தார், அவருடைய உடல் புதிய கல்லறையொன்றில் வைக்கப்பட்டது. அவருடைய உடலை யாரேனும் திருடிச் சென்று விடுவாரே என்ற எண்ணத்தில் அக்கல்லறையை ரோம அதிகாரிகள் முத்திரையிட்டு, அதைச் சுற்றிலும் சேவகர்களைக் காவல் வைத்தனர்.
இவ்விரு மனிதருள், அதாவது இயேசு மற்றும் முகம்மது இவர்களுள், ஒருவர் மட்டுமே தன் மரணத்தைக் குறித்து முன்னறிவித்தார், அதுவும் சிலுவையில் அறையப்பட்டு மரணமடைவதைக் கூறினார்.
3. இயேசு மட்டுமே இதை முன்னறிவித்தார், அவர் மரணமடைந்து, பின் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து பலருக்குக் காட்சியளித்தார்.
இவ்வுலகை முழுதும் ஆளும்படிப் பிதாவாகிய தேவனின் சிம்மாசனத்தில் தனக்கென்று நிலையான இடத்தை அடைவதற்காக இயேசு மரணத்தினின்று உயிர்த்தெழுந்த பின் பரலோகத்திற்குச் செல்வதற்கு முன் நாற்பது நாட்கள் அநேகருக்குத் தரிசனமானார் என்று வேதாகமம் நமக்குக் கூறுகிறது.
தான் தேவகுமாரன் என்று இயேசு மட்டுந்தான் அறிவித்தார். தேவனால் மட்டுமே செய்யக்கூடிய பல அற்புதங்களை ஆயிரக்கணக்கான மக்கள் தம் கண்களால் கண்டனர் என்று வேதாகமம் பதிவு செய்துள்ளது.
ஒருவன், இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்து, அவரைப் பின்பற்றினால் மட்டுமே அவன் பரலோகத்திற்குச் செல்லவும் பிதாவாகிய தேவனுடன் இருக்கவும் முடியும் என்று இயேசு வெளிப்படையாக கூறினார்.
இதுவும், முற்றிலும் உண்மைதான்: தாங்கள் தேவனின் பரிசுத்த கற்பனைகளை மீறினதால் பாவஞ்செய்தோம் என்று அனைவரும் அறிவர். இந்த மீறுதலால் (பாவம்) மற்றொரு உண்மை மனசாட்சியில் தோன்றுகிறது. ”என்னுடைய பாவத்தைக் குறித்து நான் என்ன செய்ய வேண்டும்?” நாம் செய்கிற ஒவ்வொரு பாவமும், நீதியுள்ள ஒரே நியாயாதிபதியால் பதிவு செய்யப்படுகிறது.
நாம் என்ன செய்ய முடியும்? நாம் எதுவும் செய்ய முடியாது, நாம் ஏற்கனவே பாவஞ்செய்தோம். தேவனுடைய பரிசுத்த கற்பனைகளை நாம் மீறியது, நாம் செய்யக்கூடாத ஒன்றாகும்! செய்ய வேண்டியதை, சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே எருசலேமில் இயேசு மரித்த பொழுது எல்லாவற்றையும் முன்பே செய்து முடித்தார். அவர் சத்தமிட்டு “முடிந்தது” (யோவான் 19:30) என்று சொன்னாரென்று நாம் வாசிக்கிறோம். தன் மரணம் பரிசுத்த பிதாவாகிய நீதியுள்ள தேவனைத் திருப்திப்படுத்தியதற்காக இயேசு இவ்வாறு கூறினார். இப்பொழுது முழுமையாகச் சட்டப்படி, நம்முடைய மரணத்திற்குப் பதில் மரித்த இயேசுவின் மரணத்தைப் பிதா ஏற்றுக் கொள்கிறார், அவருடைய நிறைவான இரக்கத்தினால் பரலோகத்தில் நமக்குக் கிறிஸ்துவின் நீதி கிடைக்கிறது, இதனால் பரிசுத்த தேவனுடன் முழு சந்தோஷத்துடன் என்றென்றும் வாழ முடியும்.
இயேசு தன்னைக் குறித்துக் கூறியவற்றை நம்பி, விசுவாசிக்கிறவர்களின் பாவங்களுக்காக விலைக்கிரயத்தை தன் மரணத்தின் மூலம் செலுத்தினார். அவர் தேவனுடைய குமாரன், நாம் அவருடைய வாழ்வையும் மரணத்தையும் நம்பும்பொழுது இயேசு நமக்கு இரட்சகரும் சினேகிதருமாவார்.
நாம் வாழ வேண்டுமென்பதற்காகக் குற்றம் இல்லாதவர் (இயேசு) பாவங்களுக்காக மரித்தார் (உனக்காக, எனக்காக)
இதுவரை சொல்லப்படாத மிகப்பெரிய அன்பின் கதை இது! நீங்கள் “மறுபடி பிறந்திருந்தால்” இதை முழுவதும் உண்மை என்று நீங்கள் நம்ப வேண்டும். ஏனெனில், இயற்கைக்கு அப்பாற்பட்ட உண்மைகளை நீங்கள் நம்புவதற்கு ஏற்ற விதமாய்ப் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குப் புது இருதயத்தைக் கொடுப்பார். அந்நொடியே நீங்கள் உங்கள் நிகழ்காலத்திலும் நித்தியத்திலும் இயேசுவிலும் அவருடைய வாக்குத்தத்தங்களிலும் இளைப்பாறலாம்.
இயேசுவைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் அனைத்தையும் ஒருவன் அறிந்தாலும் அவன் என்றென்றைக்கும் இரட்சிக்கப்படான். இரட்சிப்பு என்பது இயேசு கிறிஸ்துவைக் குறித்து அதிகம் அறிவதல்ல, அது பரிசுத்த ஆவியிடம் இருந்து கிடைக்கும் ஈவாகும். எபேசியர் 2:8, 9.
“புது வாழ்வின் இந்த ஈவைப் பெற்றுக் கொள்வதை பொறுத்து மட்டுமே ஒருவன், கிறிஸ்தவம் மட்டுமே பரலோகத்திற்கு செல்லும் உண்மையான வழியாகும், இயேசுவைப் பின்பற்றுவது மட்டுமே நித்தியமான உறவைப் பாதுகாப்பதற்கான வழி என்பதையும் உறுதிபடக் கூறுவான்.
கிறிஸ்தவமே சரியானது, என்பதையும் மரணத்திற்குப் பின் ஒருவனின் ஆவி இயேசுவுடன் இருக்கும்படி இப்பொழுது பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதையும் அறிவதற்காக ஒருவன் மறுபடி பிறக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவர் புது ஆவிக்குரிய பிறப்பை கொடுக்கும் பொழுது, இயேசுவைப் பற்றிய உண்மைகளை அறிவதும் அவரைப் பின்பற்ற வேண்டும் (கிறிஸ்தவம்) என்று முடிவெடுப்பதும் உடன் நிகழ்கிற நிகழ்வுகளாகும். (இறையியல் சார் விளக்கம் மீண்டும் பிறத்தல்).
தான் உயிரோடிருக்கிறதை ஒரு குழந்தை அறிந்திருப்பதுபோல, அது இருக்கிறது என்று அறிகிறோம். அதுதான் “மறுபடி பிறத்தல்” என்பது, இந்த நபர் ஏதோ ஒன்று நிகழ்ந்துள்ளது என்று அறிகிறான். அவர்கள் புதிய மனப்பாங்குடனும் விருப்பங்களுடனும் குறிக்கோள்களுடனும் வாழ்கின்றனர்.
கிறிஸ்துவுக்குள், ”புதிதாய்ப் பிறந்த ஒருவன்” முன்பு தான் வெறுத்தவற்றை இப்பொழுது விரும்புவதையும் முன்பு விரும்பியவற்றை இப்பொழுது வெறுப்பதையும் அறிகிறான். அவர்கள் கிறிஸ்துவைப் போல் சிந்திப்பதற்கும் அவரைப் போல் செயல்படுவதற்கும் அவர்களுக்கு கிறிஸ்துவின் ஒரே சிந்தையும் ஆவியும் கொடுக்கப்படுகிறது.
இன்றைய வாழ்வில் “புதிதாய் பிறந்தவன்” என்பது வேதம் வாசிப்பதில் ஆர்வமும் இயேசுவைப் பற்றிய அனைத்தையும் கற்பதும் அதாவது அவரே தேவனுடைய ஒரே குமாரன் என்பதை அறிவது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காமல் நம்பாமல், பின்பற்றாமல் ஒருவனும் பரலோகம் செல்ல முடியாது, பிதாவுடன் இருக்கவும் முடியாது. இவை அனைத்தையும் வெளிப்படையாக அறிகிறான்!
இயேசு சொன்னவற்றை விசுவாசிப்பதற்கு ஒருவனுக்கு முதலில் இயற்கைக்கு அப்பாற்பட்ட திறமை கொடுக்கப்பட்டால் ஒழிய அவன் இயேசு தன்னைக் குறித்துச் சொன்னவற்றை நம்ப முடியாது. மக்கள் அனைவரும் பாவ உணர்வினால் நிறைந்தவர்கள், அவர்கள் அனைவரும் நித்திய தண்டனையாகிய மரணத்திற்குப் பாத்திரமானவர்கள் என்ற தெளிவான புரிதலும் சேர்ந்து வரும்.
நாம் இயேசுவிடம் எம் இரட்சகராகவும் சிநேகிதராகவும் இரும் என்று கதறும் வேளையில் பாவ உணர்வும் நமக்கு வெளியே இருக்கிற ஒருவர் நம்மை இரட்சிக்க வேண்டுமென்ற ஆழமான ஆதங்கத்தையும் உண்டாக்குகின்றன. (மனந்திரும்புதல்)
நீங்கள் உங்கள் இருதயங்களை ஆராயும் பொழுது இயேசுவின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை என்று நீங்கள் விசுவாசிக்க விரும்புவதை அறிந்தாலும், நீங்கள் “புதிதாய் பிறக்கவில்லை” எனில், நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களை இரட்சிக்கும்படி இயேசுவிடம் கதறுங்கள். அவர் உங்களை இரட்சிப்பார். ஏனெனில் அவர் இதைச் செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். நீங்கள் தொடர்ந்து இயேசுவிடம் கதறி அழும்போது பரிசுத்த ஆவி உங்களை புதுச் சிருஷ்டியாக இவ்வுலகத்திற்குக் கொண்டுவர முன்குறித்த அதே நேரத்தில் கிறிஸ்துவுக்குள் நீங்கள் மறுபடி பிறப்பீர்கள்.
லூக்கா 18:13-14 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
ரோமர் 10: 9-11, என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.
13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
இப்பொழுது, கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவராக இருப்பது மிகப்பெரிய பேறு, நீங்கள் பெற முடியாத மிகப்பெரிய ஆசீர்வாதம் என்பதை முழுமையாக அறிவீர்கள். நீங்கள் சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் நிரப்பப்படுவீர்கள். அற்புதமான, நிலையான இவ்வுணர்ச்சிகள், கிறிஸ்து உங்கள் மேல் வைத்த அன்பினால், நீங்கள் மன்னிக்கப்பட்டீர்கள் மற்றும் அவருக்குள் நித்திய பாதுகாப்பைப் பெற்றீர்கள் என்பவற்றிற்கு தொடக்க ஆதாரங்களாகும்.
உண்மையாகவே இவை அனைத்தும் இயேசுவைக் குறித்ததே!
I யோவான் 5:12-13 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.
வாசிக்கவும்: பகுதி-1 கிறிஸ்தவமா அல்லது இஸ்லாமியமா – எது உண்மையான வழி என்று நாம் எவ்வாறு உறுதிபடக் கூற முடியும்?