கிறிஸ்தவமா அல்லது இஸ்லாமியமா – எது உண்மையான வழி என்று நாம் எவ்வாறு உறுதிபடக் கூற முடியும்?
பதில்: அவை அனைத்தும் இயேசுவைக் குறித்தது!
யோவான் 10:23-30 இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
சிருஷ்டிகராகிய தேவன் மனிதரை மிகவும் நேசித்தார், அவர்கள் மீண்டும் தம்மோடு அன்பின் குடும்பமாக இணைக்கப்படும்படி அவர்களுக்காக மரித்தார் என்கிற நினைத்துப் பார்க்க முடியாத மனித இனத்தின் உண்மையை முதன்முதலில் தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றியவர்கள் (சீஷர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள்.
மற்ற அனைத்து மதக் கோட்பாடுகள் மனிதரைக் குறித்து அக்கறையற்ற ஒரு தெய்வத்தால் அல்லது கட்டாயப்படுத்தி விசுவாசத்தைப் பெறுகிற ஒரு தெய்வத்தால் உருவாக்கப்பட்டன. தங்களைத் திருப்திப்படுத்துவதற்காக பலி, வேதனை மற்றும் வலியை கேட்கின்றன. கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் தவிர பிற மதக் கோட்பாடுகள் அனைத்தும் கிரியைகள் மற்றும் பயத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டவை. இவற்றைப் பின்பற்றுகிறவர்கள் குறிப்பிட்ட சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், நியாயத்தீர்ப்பு நாளில் தங்களுடன் பலிகளைக் கொண்டு வர வேண்டும். அந்நாளில் அவர்களின் செயல்கள் மற்றும் பலிகள் அனைத்தும் குறிப்பிட்ட ஓர் அளவுகோலால் அளக்கப்பட்டு, அவர்கள் செய்த தீமைகளைக் காட்டிலும் அவர்கள் செய்த நன்மைகள் அதிகம் இருக்கின்றனவா என்று அறியப்படும். பிற மத அமைப்புகள் அல்லது விதிகளைப் பின்பற்றுகிறவர்கள் அதிக நன்மைகளைச் செய்தனர் என்று ஒருபோதும் அவர்களால் உறுதியாக அறிந்துகொள்ள முடியாது! இவற்றைப் பின்பற்றுகிறவர்கள் ஒவ்வொருவரும் அதிக பயத்துடன் தங்கள் மரணத்தைச் சந்திக்க வேண்டும். ஏனெனில் தாங்கள் மோட்சம் அல்லது நரகத்திற்குச் செல்வதற்கான “நற்செய்கைகளின் சரியான அளவு” தங்களிடம் உள்ளதா என்பதை அவர்கள் அறிய முடியாது.
ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
இயேசு, எல்லாவற்றையும் படைத்த தேவன், உங்களைத் தன் சாயலில் படைத்தார் என்பதோடு மட்டுமல்ல அவர் உன்னை மிக அதிகமாக நேசித்ததால் உனக்காக அவர் மரித்தார், இதனால் நீ என்றென்றும் அவருடன் பரலோகத்தில் வாசம் செய்ய முடியும்.
பிதாவாகிய தேவன் தன்னுடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை அனுப்பி, தன்னுடைய பிரிந்துபோன குடும்பத்தினரின் பாவங்களுக்காக மரிக்கச் செய்ததன் மூலம் தன் அன்பை வெளிப்படுத்தினார். இயேசுவை விசுவாசித்து, அவரை நம்பி, அவரைப் பின்பற்றுகிற அவருடைய பிள்ளைகளுக்கும் அவருக்குமிடையே முறிந்துபோனதாக இருந்த உறவை மீண்டும் இணைக்கும் பணியை நிறைவேற்றுவதற்காக தேவகுமாரன் அடிக்கப்பட்டு, மரணத்தை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டார்.
தேவன் தன்னை விட்டுப் பிரிந்த தன் பிள்ளைகளின் மேல் தான் வைத்திருக்கிற அன்பையும் கெட்டுப்போனவர்களை இரட்சிப்பதற்காக இயேசு மரித்ததைக் குறித்த சத்தியத்தையும் தேவனின் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அவருடைய பரிசுத்த குடும்ப உறவில் சேர்ப்பது குறித்தும் கூறுகிற வேத வசனங்கள் சிலவற்றைக் காண்போம்:
- யோவான் 3:16-17 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
ரோமர் 5:6-11 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்
இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிற ஒவ்வொருவனும், அவர் தேவகுமாரன் என்றும் கிறிஸ்தவமே சரியான வழி என்றும் நம்பும்படி முதலில் ஆவிக்குரியபடி “மறுபடி பிறக்க வேண்டும்”. இச்சத்தியம் சிந்தையை மட்டும் உள்ளடக்கியது அல்ல, விருப்பத்தையும் உணர்ச்சிகளையும் உள்ளடக்கியது. (ஆளுமைத் தன்மை).
உங்களுக்கும் மனித இனத்துக்கும் “தேவனுடைய அன்பு” என்ற தலைப்பில் மேலே கொடுக்கப்பட்ட சுருக்கவுரையானது, கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் இவற்றுள் எது சரியான வழி என்று நம்மால் எவ்வாறு உறுதிபடக் கூற முடியும்? என்கிற உங்கள் கேள்விக்குப் பதில் கண்டறிய உங்களுக்கு உதவும் என நாங்கள் நம்புகிறோம்.
கிறிஸ்தவத்தில் தவிர, வேறு எந்த மதமுறைமைகளில் அல்லது மதக் கோட்பாடுகளில் உள்ள வேறு எத்தெய்வமும் (இவை அனைத்தும் தேவனால் உண்டாக்கப்படாமல் மனிதனால் உண்டாக்கப்பட்டவை) அன்பினால் தான் படைத்தவர்களை நேசித்து, அவர்களுக்காக மரித்ததில்லை.
கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சுய “பரிசுத்தத்தினால் அல்லது நற்கிரியைகளினால்” அவருடைய அன்பையும் பாசத்தையும் சம்பாதிக்க வேண்டியதில்லை. பிதாவாகிய தேவனும் குமாரனாகிய தேவனும் முன்பே நம்மில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களுக்காக தேவகுமாரன் மரித்ததினால், நாம் பரிசுத்த தேவனுடன் மீண்டும் ஒப்புரவாகி, முழு சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவருடன் என்றென்றும் வாழ முடியும்.
தொகுப்புரை: கிறிஸ்தவமா Vs இசுலாமா என்கிற உங்கள் கேள்விக்கு சரியான பதிலுக்குமுன் பார்க்க வேண்டிய இரு கேள்விகள் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளன: 1) இயேசு, உண்மையான தீர்க்கதரிசியா அல்லது போலியான தீர்க்கதரிசியா? 2) மறுபடி பிறத்தல் அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?
உண்மையில், அவை அனைத்தும் இயேசுவைக் குறித்ததே!
உங்கள் நண்பர்- WIFM CAMPUS
I யோவான் 5:12–13
குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.
பகுதி-2ஐ – இயேசுவைக் குறித்த வரலாற்று உண்மைகள் – வாசிக்கவும்.
…………