பதில்: அப்போஸ்தலர் 16:29-32 அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்து வந்து; ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும்; உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
இரட்சிப்பின் பேழையில் ஒரே ஒரு கதவு தான் உண்டு, இயேசுவின் வாழ்வு, மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் மற்றும் இப்பூமியை ஆட்சி செய்யும்படி சீக்கிரம் திரும்ப வருதல் முதலியவற்றை விசுவாசிப்பது.
உங்கள் கேள்வி எண். 2: “தேவன் என்னை ஏற்றுக் கொண்டார், நான் அவருடைய பிள்ளையாக மாறினேன் என்பதை நான் எவ்வாறு அறிவது?”
பதில்: உங்களுக்கு இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துவதற்குப் பரிசுத்த ஆவியானவர் உங்களைத் தெரிந்தெடுத்துள்ளார். இது குறித்த வேதப்பகுதியான அப்போஸ்தலர் 19 ஆம் அதிகாரம் இதற்குச் சான்றாக அமையும்.
பவுலும் சீலாவும் இயேசுவின் அன்பைக் குறித்தும் தியாக மரணத்தைக் குறித்தும் எபேசியருக்கு அறிவித்தனர். பவுல் மற்றும் சீலா மூலம் எபேசியர்கள் அறிந்த செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்பதைப் பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்தினார், அவர்கள் இருதயங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. இயேசு கிறிஸ்துவைக் குறித்து எபேசியர் கேட்ட செய்தி அவர்கள் இருதயங்களில் வருத்தத்தையும் மனந்திரும்புதலையும் உண்டாக்கியது. இயேசு விரும்புகிறதை அவர்கள் விரும்பவும் அவர் வெறுக்கிறதை அவர்கள் வெறுக்கவும் கூடிய புதிய இருதயம் உடனடியாகக் கொடுக்கப்பட்டது.
இப்புது இருதயம் அவர்களின் செயல்களில் வெளிப்பட்டன:- அப். 19:17-20 இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள். அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
எபேசியருக்குப் பரிசுத்த ஆவியால் புது இருதயங்கள் கொடுக்கப்பட்டவுடன் பிறரை நேசிப்பதை விரும்புகின்றனர். தேவனின் குடும்பத்திற்குள் வருகிற “புதிதாய்ப் பிறந்த” ஒவ்வொருவரின் அனுபவமும் இதுதான். இயேசு நேசிக்கிறதை நீங்கள் நேசிக்கவும் அவர் வெறுக்கிறதை நீங்கள் வெறுக்கவும் தொடங்குவீர்கள். கவலையும் சந்தோஷமும் உங்கள் இருதயங்களில் வருகிறதைக் காண்பீர்கள். 1.) நீங்கள் நேசிக்க வேண்டிய உங்கள் அயலாருக்கு விரோதமாக நீங்கள் செய்த செயல்களை நினைத்தும் முன்பு தேவனை நீங்கள் வெறுத்ததை நினைத்தும் கவலை தோன்றும். 2.) உங்கள் பாவங்களுக்காக மரிப்பதற்காகத் தன் ஒரே மகனை அனுப்பிய இரக்கமும் அன்புமுடைய தேவன் என்ற மாறாத சத்தியத்தை அறிந்ததால் நீங்கள் சந்தோஷத்தால் நிறைவீர்கள்.
விளக்கவுரை:
பவுலும் சீலாவும் எபேசியரிடம் வந்தனர். அவர்கள் உங்களைப் போன்றவர்கள், ஒவ்வொருவரும் நேசிக்கப்படக்கூடிய ஆத்துமாக்கள். உங்கள் அனைவரையும் போன்று எபேசியரும் தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டவர்கள், ஆனால் பல வருடங்களாக அவர்களின் இருதயங்கள் இவ்வுலகத் தகப்பனாகிய பிசாசைச் சார்ந்து அவனுடைய பிள்ளைகளாகச் செயல்பட்டனர். எபேசியரும் மற்றவர்களைப் போல பிசாசு என்ற உலகத்தகப்பனை உடையவர்கள். ஆனாலும் அவர்களை முழுவதும் நேசிக்கிற சர்வவல்லயுள்ள தகப்பன் அவர்களுக்குத் தேவை; அவர் பிசாசைப் போல அல்ல, முழுமையாக அவர்களை நேசிக்கிற பிதா என்பதை அறிய வேண்டியது அவர்களின் தேவை.
பவுலுக்கும் சீலாவுக்கும் தேவனின் பரிசுத்த ஆவியானவர் முன் சென்று, வாழ்வை மாற்றக்கூடிய மிகப்பெரிய சத்தியத்தை எபேசியர் பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவர்களின் இருதயங்களை ஆயத்தப்படுத்தினார். எவ்வாறு? யோவான் 16:8-9 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக் குறித்தும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக் குறித்தும்,..
எபேசியரில் பலர் எவ்வாறு பதில் செய்தனர்? –அப்போஸ்தலர் 19: 17-20 இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள். அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.
சுருக்கவுரை: இவ்வுலகில் இருக்கிற அனைவரின் இயல்பான தகப்பனாகிய பிசாசு, வெறுப்பு நிறைந்த, அச்சம், அழிவு தரக்கூடியனாக இருந்து, தன் சொந்தப் பிள்ளைகளைக் கஷ்டப்படுத்தவும் அழிக்கவும் விரும்புகிறவன்.
பிசாசு, தன் பிள்ளைகளை மிகவும் கடினமாய் நடத்தி, அவர்களுக்குப் பல விதங்களில் தீங்கு செய்து, கொன்று அவர்களை நித்திய மரணத்திற்குள் கொண்டு போகிறான்.
யோவான் 8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்;;;;;; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.
ஆனால் தேவன், தன் அன்பை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் சர்வவல்ல பிதாவாக இருக்க விரும்புகிறார், இதற்கு அடையாளமாக, நம்முடைய மரணத் தண்டனையைப் பெற தன் சொந்த குமாரனை அனுப்பினார். சர்வவல்ல பிதாவாகிய தேவன் நம்மை நேசிக்கிறார், அவர் வாக்கு பண்ணியதைக் காண்போம்:
வெளிப்படுத்தின விசேஷம் 21:4 “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார், இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது”.
லூக்கா 11:9-13 “மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்கு திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான், தேடுகிறவன் கண்டடைகிறான், தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால் அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
லூக்கா 12:6-8 “இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.
மத்தேயு 6:25-34 “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னைத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேரத்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பாரக்கிலும் நீங்கள் விசேஷத்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள், அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால் என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
யோவான் 14:1-3 “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.”
பின்வரும் ஒரு கேள்வி இன்னும் இருக்கிறது. இந்த நொடிவரை நீ பிசாசைப் பின்பற்றி, அவனைப் போல நடந்துகொள்கிறாய் என்று பரிசுத்த ஆவியானவர் உன்னை உணர்த்துவிக்கிறாரா?; தேவன் இவ்வுலகத்தை மிகவும் நேசிக்கிறார் (உன்னையும்), அதனால் உனக்காக மரிக்கும்படித் தன் மகனை அனுப்பினார், இதனால் நீ மனம்மாறி தேவனுக்கும் சர்வவல்ல பிதாவுக்கும் பிள்ளையாக மாறமுடியும் என்று பரிசுத்த ஆவியானவர் உன்னை நம்பப் பண்ணுகிறாரா?
மேற்கண்ட சத்தியங்கள் உன் சொந்த இருதயத்தை எச்சரித்தால் உன்னால் சும்மா இருக்க முடியாது! உனக்கு நடந்தவற்றையும் நீ “மறுபடி பிறந்ததையும்” புது மனிதனாக மாறியதையும் யாரேனும் ஒருவரிடம் சொல்ல விரும்புவாய். இவ்வாறு நீங்கள் இருப்பீர்களானால், உங்களில் ஏற்பட்ட அம்மாற்றத்தை நீங்கள் கூறும் முதல் மனிதராக நாங்கள் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.
நீங்கள் ஏதேனும் ஒரு மத இயக்கத்தில் அல்லது ஆலயத்தில் இணைவதில்லை அல்லது பணம் செலுத்த வேண்டாம் அல்லது மதச்செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்பதை நினைவில் வைக்கவும்.
இம்மாற்றம் உங்கள் மனதில் ஏற்பட்டால், உங்கள் சர்வவல்ல பிதாவுக்கும் உங்களுக்கும் மாறாத உறவைப் பரிசுத்த ஆவி மூலம் உண்டாகியுள்ளது உறுதி என்பதும் அவர் உங்களைத் தன் குடும்பத்தில் சேர்த்துக் கொண்டார் என்பதும் உறுதி.