கட்டுரையைப் பகிரவும்
ஒரு நபருக்குள் இரட்சிப்பின் நம்பிக்கையைக் கொண்டு வந்து, இயேசுவோடு, பரலோகத்தில் நித்திய இரட்சிப்பைப் சுதந்தரிப்பது என்பதன் அர்த்தம் என்ன? கலாத்தியருக்கு இதை எழுதியதில் பவுலின் நோக்கம் என்ன?
பதில்: இரட்சிப்பின் நம்பிக்கை என்பது இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை ஒருவர் விசுவாசிப்பதையே முழுமையாகச் சார்ந்துள்ளது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். இயேசுவை விசுவாசிப்பது என்பது, இயேசுவைப் பற்றிய சத்தியத்திற்கு புறம்பான எதையும் நிராகரிப்பது என்பதே, இதுவே ஒருவனுக்கு இருக்கும் மிக முக்கியமான எண்ணங்கள் ஆகும்! ஏன்? ஒருவரின் நித்திய வாழ்வு என்பது பரலோகம் அல்லது நரகம் என்று அவருடைய பதிலைப் பொருத்ததாகவே இருக்கிறது.
கலாத்தியர் 2:16 இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.[இரட்சிப்பைப் பெறுதல்].
“நீங்கள் உங்கள் அமைதலுமுள்ள இருதயத்தில், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சத்தியத்தின் இரகசியத்தை அறியும்படி பரிசுத்த ஆவியானவரிடம் நீங்கள் கேட்பீர்களானால், அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார், நீங்களும் இயற்கைக்கு அப்பாற்பட்ட மகிழ்ச்சியால் நிரப்பப்படுவீர்கள்.
“இரட்சிப்பு என்பது எந்த வகையான செயல்களாலும் ஏற்படாது. அது ஒரு சபையிலோ அல்லது மத அமைப்பில் சேருவதோ, ஒருவரின் வாழ்க்கையை சீர்திருத்த முயற்சிப்பதோ, நற்கிரியைகளை செய்வதோ, பலிகளை செலுத்துவதோ, உறுப்பினர் அட்டையில் கையொப்பமிடுவதோ, பணம் கொடுப்பதோ, ஒரு மத விழாவில் நடைபாதையில் நடப்பதோ அல்ல.
அப்போஸ்தலர் 16:30-31 அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
இரட்சிப்பு எளிமையானது: “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்“
உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும், இப்போது மரித்து விடுவோம் அல்லது எப்போது மரிப்போம் என்பது பிரதானமான கேள்வி அல்ல, ஆனால் அவர்கள் மரிக்கும் போது கர்த்தராகிய இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு மரிப்பார்களா என்பதே பிரதானமான கேள்வியாகும்.
வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டதுப்போல மனித வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, எருசலேமுக்கு வெளியில் உள்ள கொல்கொதா என்னும் இடத்தில் இயேசுவோடு இரண்டு குற்றவாளிகள் மரித்தார்கள், எல்லா மனிதர்களும் இந்த முதலாம் குற்றவாளியாகவோ, அல்லது இரண்டாம் குற்றவாளியாகவோ மரிக்கிறார்கள். “உங்கள் மரணத்தின் போது நீங்கள் எந்த குற்றவாளியைப்போல மரிக்க விரும்புகிறீர்கள்? இரண்டாம் குற்றவாளி இயேசுவின் மீது நம்பிக்கையை வைத்ததினால் இயேசுவினால் பரதேசுக்கு கொண்டு செல்லப்பட்டான், ஆனால், முதலாம் குற்றவாளி இயேசுவின் மீது நம்பிக்கையை வைக்காமல், அவரை நிராகரித்து நித்திய நரகத்தைத் தேர்ந்தெடுத்தான்.
லூக்கா 23:40-43 மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இயேசு இல்லாமல் மரிப்பது என்பது நம்முடைய ஆபத்தை குறிக்கும்., அவரிடமிருந்து நிரந்தரமாக துண்டிக்கப்படும் வாழ்க்கை என்பதாகும், சிலுவையில் அறையப்பட்ட இரண்டாம் குற்றவாளியை உணர்த்தினதுபோலவே, பரிசுத்த ஆவியானவர் உங்களைத் உணர்த்தும்போது, உங்கள் உள்ளத்தில் நீங்களே தீர்மானம் எடுக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை உங்களுக்கு வெளிப்படுத்தும்படி நீங்கள் பரிசுத்த ஆவியானவரைக் கேட்பீர்களானால், நிச்சயமாகவே அவர் வெளிப்படுத்துவார், இதனால், நீங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள்.
பூமியின் மீதெங்கும், அற்புதமான மனிதனாக சுற்றித்திரிந்து, உங்களின் பாவத்திற்கான கிரயத்தை செலுத்துவதற்காக மரித்த இயேசு கிறிஸ்துவைப் பற்றி, இப்பொழுது, மற்றவர்களுக்குச் சொல்ல மகிழ்ச்சியோட விரும்புவீர்கள்.
- யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை[இயேசுவை] ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
– அப்போஸ்தலர் 2:38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்றான்.
– யோவான் 16:8-11 அவர் [பரிசுத்த ஆவியானவர்] வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், நீங்கள் இனி என்னைக்[இயேசுவை] காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி[சாத்தான்] நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
“பரிசுத்த ஆவியானவர் இந்த சத்தியத்தை எனக்கு உணர்த்தியபோது, அவர் என் உள்ளத்தில் கிறிஸ்துவின் ஆவியைப் பிறப்பித்து, என்னை மகிழ்ச்சியில் நிரப்பினார். உண்மையில், நாம் யாரை நேசிக்கிறோம் என்பது நமது நிகழ்காலத்தையும் நித்திய மகிழ்ச்சியையும் தீர்மானிக்கிறது [யோவான் 14:21,23]
கிறிஸ்துவுக்குள் பிரியமான அனைவருக்கும் எங்கள் அன்பை தெரிவித்துக் கொள்கிறோம்.
– ஜான் + பிலிஸ் + நண்பர்கள் @ WasIfForMe.com
படிக்க வேண்டிய கட்டுரை: நான் நம்புகிறேன்!