கட்டுரையைப் பகிரவும்
நான் ஏற்கனவே இயேசுவை பின்தொடர்பவன். ஆனால் நான் ஆவிக்குறிய தாக்குதல்களில் இருக்கிறேன்… சில சமயங்களில் அது என் இரட்சிப்பை சந்தேகிக்க வைக்கிறது… நான் என்ன செய்ய வேண்டும்?
பதில்: உங்கள் செய்தியை நாங்கள் படித்தபோது, எங்கள் இதயங்கள் மிகுந்த மகிழ்ச்சியினால் பொங்கினது. ஏன்? ஏனென்றால், தேவனுடைய பிள்ளைகள் அனைவரும் சந்தேகத்தாலும் பயத்தாலும் ஏற்படும் வலியை அனுபவித்திருப்பார்கள், இப்போதும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
இந்த எளிமையான உண்மையை காண மகிழ்ச்சியுடன் தொடருங்கள்! தங்கள் நித்திய இரட்சிப்பைப் பற்றி கவலைப்படாத மக்கள் இரட்சிக்கப்படுவதில்லை, ஏனெனில் அவர்கள் தங்கள் நித்திய விதியைப் பற்றி கவலைப்படுவதில்லை.
அடுத்து: தேவனுடைய மாறாத தன்மையில், அவருடைய மாறாத குணாதிசயத்தில் உங்களை முழுமையாக அர்ப்பணித்து விடுங்கள். தேவனால் பொய் சொல்ல முடியாது! அவருடைய குமாரனாகிய இயேசுவை விசுவாசத்தினாலும், நம்பிக்கையாலும் அன்புகூருகிற யாவருக்கும் அவருடைய வாக்குத்தத்தங்கள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.
நடைமுறை பயன்பாடு:
- கர்த்தராகிய இயேசு தம்முடைய நாம மகிமைக்காகவும் உங்களின் நன்மைக்காகவும் “வறண்ட இடத்துக்கு” உள்ளேயும் வெளியேயும் கொண்டு வரப்படுவதற்கு நீங்கள் தகுதியானவர்கள் என்று கருதினார் என்பதை உங்கள் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு மதிப்பாய்வு செய்யுங்கள்.
- PDF-இன் வடிவில் இணைக்கப்பட்டுள்ள “நீங்கள் விசுவாசிப்பீர்களா!” – என்ற இரட்சிப்பின் நற்செய்தியை மதிப்பாய்வு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
- இணைக்கப்பட்டுள்ள – “தேவனால் பொய் சொல்ல முடியாது! (குறியிடப்பட்டது) என்ற இணைப்பைப் பார்க்கவும்
- தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட 31 பக்கங்களின் PDF ஐத் திறக்கவும். ஒவ்வொரு பக்கமும் தேவனால் அளிக்கப்பட்ட ஒரு வசனத்தை/வாக்குறுதியை எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு வசனத்தில் கவனம் செலுத்த, இது உங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் எடுக்கும்.
- அடுத்த 30 நாட்களில் எங்கள் வலைத்தளமான wasItForMe.com இல் இணைக்கப்பட்டுள்ள வீடியோக்கள் மற்றும் பிறவற்றைப் பாருங்கள்.
- உங்கள் மறுபிறப்பிற்காகவும், கீழ்ப்படிதலுக்கான வல்லமைக்காகவும் பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி செலுத்துங்கள் – I தெசலோனிக்கேயர் 5:16-18 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. [இவ்வாறு நீங்கள் தேவனுடைய சித்தத்தில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு உறுதியாகிறது, ஏனென்றால் முதலில் அதை நிறைவேற்றுவதற்கான வல்லமையை நமக்கு கொடுக்காமல், தேவன் ஒருபோதும் கட்டளையை கொடுக்க மாட்டார்.
- நீங்கள் ஆவிக்குரியப் போரில் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணருங்கள். 2 நாளாகமம் 20:20-22ஐ வாசியுங்கள், யோசபாத் பாடகர்களை யுத்த வீரர்களுக்கு முன்பாக அனுப்பினான்- [“கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் துதிக்க, பாடகரை நிறுத்தினான்.” அவர்கள் கர்த்தரை துதித்து அவருடைய கிருபை என்றும் உள்ளது என்று ஆர்ப்பரித்தார்கள்.” [ஒவ்வொரு ஆவிக்குரியப் போராட்டத்திற்கும் இதுவே எங்களிடம் காணப்படும்”போர்த் திட்டம்”.]
- உங்கள் சாட்சியை பகிர தொடங்குங்கள். இதுவரை சொல்லப்பட்டிராத மிகச்சிறந்த அன்பின் கதையை உங்களால் முடிந்தவரை பலரிடம் சொல்லுங்கள்! குற்றமற்றவர் [இயேசு கிறிஸ்து] குற்றவாளிகளுக்காக [நீங்களும் நானும்] மரித்தார். இதனால் குற்றவாளிகள் மன்னிக்கப்படுவார்கள், மேலும் பரலோகத்தில் எப்போதும் தேவனுடன் முழு மகிழ்ச்சியுடன் அவர்களால் வாழ முடியும். இதைச் செய்வதற்கான ஒரு வழி என்னவென்றால், அடுத்த 30 நாட்களுக்கு, ஒவ்வொரு நாளும் எங்கள் WasItForMe.com வீடியோக்களை ஒருவருடன் [அல்லது பலருடன்] பகிர்ந்துகொள்வது மட்டுமே.
- ஒவ்வொரு நாளும் யாரிடமாவது நீங்கள் அவர்களை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்றும், இயேசு அவர்களை எல்லையற்ற அளவில் நேசிக்கிறார் என்பதை அறிந்து நீங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்றும், அவர்களுக்காக இயேசு மரித்தார் என்பதையும் சொல்லுங்கள். “மற்றவர்களுடன் பழகும் நபராக இருங்கள், சுயமாக மாறும் ஒரு நபராக மாறாதீர்கள்”. கிறிஸ்துவை அதிகமாக நேசிப்பவராக மாற முயற்சி செய்யுங்கள், அது உங்களை மற்றவர்களை நேசிக்கிறவர்களாக மாற்றும்.
- எங்களுடன் தொடர்ந்து தொடர்புகொண்டு உங்கள் ஆவிக்குரிய முன்னேற்றத்தை தெரிவிக்கவும். உங்கள் பயம் உங்கள் இதயத்தை விட்டு வெளியேறி, உங்கள் மகிழ்ச்சி உங்களுக்கு திரும்ப கிடைத்த நாளை உணர்ந்ததை கவனியுங்கள், அந்த நாளையும் உணர்ச்சிபூர்வமான ஊக்கத்தையும் உங்கள் பைபிளில் பதிவு செய்யுங்கள், இதனால் உங்கள் வாழ்க்கையில் அடுத்த ஆவிக்குரிய போர் வரும்போது எதிரியை எதிர்கொள்ள நீங்கள் ஏற்கனவே தயாராக இருப்பீர்கள்.
மேற்கண்ட 10 செயல்களில் ஈடுபடுவதன் மூலம், நீங்கள் தேவனின் முழு கவசத்தையும் திறம்பட அணிந்து கொள்கிறீர்கள்.- எபேசியர் 6:10-20 கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
அன்புள்ள புதிய நண்பரே, மேற்கூறியவற்றுடன் 30 நாட்களுக்கு “உங்கள் பாதையையும் உங்கள் படகுகளையும் அமைப்பதன்” மூலம், மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த இதயத்தைப் பெறுவதற்கான பாதையில் உங்களை அமைத்துக் கொண்டீர்கள். இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தத் தேர்ந்தெடுக்கும் எவருக்கும் பதிலளிப்பதில் பரிசுத்த ஆவியானவர் மகிழ்ச்சியடைகிறார். அன்பு நிறைந்த இதயத்துடனும், மற்றவர்கள் மீது கரிசனை நிறைந்த இதயத்துடனும் நீங்கள் இயேசுவைப் பின்தொடரும் போது வரும் மாற்றத்தை நீங்கள் கவனிக்காமல் இருக்க முடியாது!
தேவனால் மறுபடியும் பிறந்தவர்கள் மட்டுமே தேவனை நேசிக்க வேண்டியபடி நேசிக்கவும், மற்றவர்களை நேசிக்க வேண்டியதைப் போல நேசிக்கவும் அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள். நாங்கள் இந்த பாதையைத் தேர்ந்தெடுத்து, எங்களால் முடிந்தவரை அனைவரையும் எங்களுடன் பரலோகத்திற்குச் வரும்வாறு கேட்டுக்கொள்கிறோம், ஏனென்றால் எல்லா மக்களுக்கும் மிகச் சிறந்ததை செய்ய நாங்கள் விரும்புகிறோம்.
எல்லா மக்களுக்கும் மிகச் சிறந்தது மிகவும் எளிமையான சத்தியமும் தேவனிடமிருந்து வந்த பரிசும் ஆகும்: அப்போஸ்தலர் 16 :30-31 அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
நீங்கள் 30 நாட்களுக்கு மேற்கூறியவற்றிற்கு உறுதியளித்தால், உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஊற்றப்படுவதற்கான மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஒரு பெரிய ஆசீர்வாதத்தை பரிசுத்த ஆவியானவர் திட்டமிட்டுள்ளார்.
கிறிஸ்துவுக்குள் எங்கள் அன்பு முழுவதும் உங்களுக்காக –
Jon + Philis @ WasItForMe.com
https://wasitforme.com/wp-content/uploads/2022/02/17.-Was-It-For-Me_Guaranteed- Essay.pdf
பின்வரும் காணொளிகளைப் /வீடியோக்களைப் பாருங்கள்:
1. https://vimeo.com/912288970
2. https://vimeo.com/687983931
3. https://vimeo.com/761290131