தேவன் கொடூரமானவர் என்று ஏன் சிலர் சொல்கிறார்கள்?
கட்டுரையைப் பகிரவும்
இப்படிப்பட்ட கொடூரமான தேவனை நான் ஏன் நேசிக்க வேண்டும்?
கடுமையான சோதனைகளுக்கு ஆளாகும், கொடூரமாகக் கொல்லப்படும், பெண்களை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும் மனிதர்களைக் கண்டு தேவன் ஏன் அமைதியாக இருந்து கண்களை மூடிக்கொள்கிறார்? அப்படிப்பட்ட தேவனை நான் நேசிக்க வேண்டுமா?
பதில்: ஏனென்றால், தேவன் உங்களை நேசிக்கிறார்! தேவன் தனது மனித சிருஷ்டிப்பை நேசிக்கிறார். அவர் பரிபூரணமானவர், நல்லவர், கொடுமைக்கு எதிர்மறையானவர் மற்றும் முற்றிலும் நீதியினால் நிறைந்தவராக இருக்கிறார். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் உங்களுக்கும், எனக்கும், பூமியில் உள்ள அனைத்து ஜனங்களுக்கும் அவர் தனது அன்பை நிரூபிக்கிறார், ஏனெனில் தேவன், நம்மை உயிருடன் வைக்க கூடியதான நமது சுவாசத்தையும், நாம் உட்கொண்டு உயிர் வாழ தேவையான எல்லா உணவையும் நமக்குத் தருகிறார்.
தேவனுடைய அன்பு https://www.facebook.com/wasitforme.tamil/videos/1121961888877967
அன்புள்ள நண்பரே, பரிசுத்த தேவனை நியாயந்தீர்ப்பதற்கான ஒரு அளவுகோலைப் பயன்படுத்த சில “நல்ல குணங்களை” உங்கள் இருதயத்தில் கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்களா? தேவனுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டைக் கட்டியெழுப்ப மனிதர்கள் பெரும்பாலும் தங்கள் இருதயத்திற்குள் “நல்ல குணங்களைக்” கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். ஜனங்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த “குணங்களை மற்றும் திறன்களை” கடவுளின் பரிபூரண குணங்களுக்கு மேலாக உயர்த்த முயற்சிக்கிறார்கள், இதனால் தேவன் தகுதியற்ற குணங்களைக் கொண்டிருப்பதாகவும் திறமையின்மை உள்ளவராக இருப்பதாகவும் ஜனங்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த குறைபாடுள்ள பகுத்தறிவு ஒரு துணிச்சலான முடிவை உருவாக்குகிறது: “நான் தேவனாக இருந்தால், நான் முற்றிலும் வித்தியாசமாக இருப்பேன். இந்த தீமை மற்றும் வேதனையை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன், ஏனென்றால் மற்றவர்களிடம் நல்ல, கனிவான, அன்பானவர்களின் உலகத்தை நான் உருவாக்குவேன்.” என்று கூறுவார்கள்.
இருப்பினும், இந்த குறைபாடுள்ள பகுத்தறிவின் கீழ் ஜனங்கள் “சுதந்திரமாக” இருக்க முடியாது. அத்தகைய ஜனங்கள், “சுதந்திரம்” இல்லாமல், ரோபோக்களாக மட்டுமே இருக்க முடியும், தவிர மனிதர்களாக அல்ல!
ஒரு ஜீவனுக்கு சுதந்திரமான விருப்பம் வழங்கப்பட்டால், அவை வெறுப்பதற்கான தங்கள் சுதந்திர விருப்பத்தைப் பயன்படுத்தும் திறனுடன் அன்பைத் தேர்ந்தெடுக்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறியவில்லையா? அன்பிற்கு ஒரு “அளவு குறிப்பு” இல்லையென்றால் அதற்கு எந்த அர்த்தமும் இருக்க முடியாது. அன்பு என்றால் என்ன என்பதை அறிய, ஒரு ஜீவன் அதன் எதிர்மறையான வெறுப்பைப் பற்றிய புரிதலையும் அறிந்திருக்க வேண்டும். உண்மையான அன்பு தன்னார்வத் தேர்வாக இருக்க வேண்டும்!
ஒரு குடும்பம் தன்னை மனதார நேசிக்க வேண்டும் என்று நமது ஒரே ஒரு சத்தியமும், சிருஷ்டிகருமான தேவன் விரும்பினார். ஒருவன் தானாக முன்வந்து தேவனை நேசிக்க முடியும் என்றால், அவன் தானாக முன்வந்து தேவனை நிராகரிக்கவும், வெறுக்கவும் கூடிய திறனை கொண்டிருக்க வேண்டும்.
மீண்டும் இதை வலியுறுத்துவதற்கு, பின்வருபவை முற்றிலும் உண்மையாக இருக்க வேண்டும்: ஒரு ஜீவனானது “தேவனை நேசிக்கவும்”, “தேவனை வெறுக்கவும் அல்லது நிராகரிக்கவும்” வேண்டிய திறனை கொண்டிருக்க வேண்டும். “தங்கள் அயலகத்தாரை நேசிக்க” ஒரு திறனை உருவாக்க முடியுமானால், “அயலகத்தாரை வெறுக்கவும்” தேர்வு செய்யும் திறனை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
இன்று, உங்கள் சுயாதீனமான விருப்பத்துடன், நீங்கள் தேவனை நேசிக்கவோ அல்லது வெறுக்கவோ, மற்றும் உங்கள் அயலகத்தாரை, நேசிக்கவும் அல்லது வெறுக்கவும் தேர்வு செய்கிறீர்கள்!
பின்வருபவை தேவனின் உற்சாகமான சுதந்திர விருப்பமாகும், இது அவரது சிருஷ்டிப்புகளின் மேல் கிரியை செய்ய தேவனை ஈடுப்படுத்துகிறது:
– ரோமர் 5:6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
தேவன் நம்மை அதிகமாக நேசித்ததினால், மரிக்க தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். ஆனால், தேவன் பதிலுக்கு அவரை நேசிக்கும்படி நம்மை வற்புறுத்த மாட்டார்!
அன்பு என்பது தன்னார்வமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டுப்படுத்தப்பட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட அன்பாக இருக்கக் கூடாது. ஒரு உண்மையான உறவின் அரவணைப்புக்குத் தேவையான பாசத்தின் தரம் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட அன்பு என்பது கட்டாயப்படுத்தப்பட்ட கீழ்ப்படிதல் மட்டுமே ஆகும்.
கொடுமை, வலி, துக்கம், துன்பம், சோகம் மற்றும் மரணமனைத்தும் பரிசுத்த தேவனால் உண்டானது அல்ல, ஆனால் பாவம் நிறைந்த மனிதகுலம் தேவனுடைய அன்பை நிராகரிப்பதால் ஏற்ப்பட்டது.
ஒரு நபர் சில “நல்ல குணங்களை” காண தீர்மானித்து தங்களின் சொந்த இருதயத்தைப் உற்றுப் பார்க்கும்போது, அவர்கள் ஆதியில் ஏதேன் தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளின் பூர்வீக பாவ சுபாவத்தை பின்பற்றுகிறார்கள், “நாங்கள் எங்கள் சொந்த தேவனாக இருக்க விரும்புகிறோம். சிருஷ்டிகராகிய தேவன் எங்களை ஆளுகை செய்வதை நாங்கள் விரும்பவில்லை.” என்று அவர்கள் நிர்ணயித்திருக்கலாம்: [பரிந்துரைக்கப்பட்டது]
“நமது சொந்த தேவர்களாக” இருக்க விரும்புவதற்கான இந்த வீழ்ச்சியடைந்த தவறான பகுத்தறிவு, ஒரு நபர், தேவனைப் பற்றி ஒரு விமர்சனத்தை உருவாக்க அனுமதிக்கிறதை உணர்த்துகிறது, அதே நேரத்தில் தேவன் தனது இருதயத்தில் தீமையை வைத்திருப்பதாகவோ அல்லது தீமையை தடுக்க வல்லமை அற்றவராகவோ இருப்பதாக பொய்யான குற்றம் சாட்டுகிறது. இவ்வாறு, சிருஷ்டிகளில் சிதைந்துப்போன இருளான உள்ளங்கள், தேவனுடைய குமாரனாகிய இயேசுவை விசுவாசித்து, இழந்துப்போன மனிதகுலத்தை, தேவனுடன் மீண்டும் இணைக்க அவருடைய நித்திய குடும்பத்திற்குள் சேர்க்கிறதான முடிவை பொறுமையுடன் செயல்படுத்தும் அவரது அன்பின் முழு ஆழத்தை புரிந்து கொள்ளாமல் தங்கள் பரிபூரண சிருஷ்டிகரை நியாயந்தீர்க்க அடிக்கடி முயற்சிக்கும்.
தேவனின் முழுமையான அன்பின் கட்டளையை இங்குப்பார்ப்போம்:
– மாற்கு 12:29 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
கேள்வி: உலகம் ஏன் கொடூரமான, அன்பற்ற, சுயநலமான மற்றும் வஞ்சகமான மக்களாலும் செயல்களாலும் நிறைந்துள்ளது?
பதில்: ஏனென்றால் நாம் அனைவரும் கடவுளின் பரிபூரண அன்பின் கட்டளையை மீறுகிறோம். நாம் அனைவரும் பரிசுத்த தேவனுக்கு விரோதமாக தொடர்ந்து கலகம் செய்கிறோம், நம் அயலகத்தாருக்கு [மன ரீதியாகவோ, வாய்மொழியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ நாம் நமக்கு மிக நெருக்கமானவர்களுக்கு “தொந்தரவு செய்கிறோம்”] தீங்கு செய்கிறோம்.
நாம் அனைவரும் குற்றவாளிகள் என்பதையும், தேவனின் முழுமையான அன்பின் கட்டளையை மீறியுள்ளோம் என்பதையும் நீங்களும் நானும் அறிவோம். இதனால் தான் நம்முடைய சொந்த இருதயங்களைப் பார்த்து, பரிசுத்த தேவனை நியாயந்தீர்க்க ஒரு தளத்தை உருவாக்க முயற்சிப்பது மிகவும் முட்டாள்தனமானது, அவர் எப்போதும் முழுமையாக நேசிக்கிறார். நாம், தேவனைப் போலல்லாமல், நம்மில் எந்தப் பகுதியிலும் முழுமையானதைக் கொண்டிராமல். நாம் பாவிகளாகவே காணப்படுகிறோம்.
மேலும்: பாவம் நிறைந்த மனிதர்கள், சத்திய தேவனை தவறாக நியாயந்தீர்த்த பிறகு, பொய்யான தேவர்களை உருவாக்கத் தொடங்குகிறார்கள். மனிதனின் வீழ்ச்சியடைந்த கற்பனையால் உருவாக்கப்பட்ட பொய்யான தேவர்கள் தங்களைப் போலவே இருக்கிறார்கள், ஆனால் சில நேரங்களில் அவர்களுக்கு அதிக சக்தி இருக்கும். இந்த பொய்யான தேவர்கள் கொடூரமானவர்கள், அன்பற்றவர்கள், சுயநலவாதிகள், வஞ்சகர்கள் மற்றும் பாவம் நிறைந்த மனிதர்கள் தங்களிடம் காணும் பண்புகளை பிரதிபலிக்கிறார்கள்.
பூமியில் கடந்து வந்த ஒரே ஒரு முழுமையான மனிதர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமே. தேவனின் அன்பை அவர்களுக்குக் காட்ட வந்ததால், அவர் தனது சிருஷ்டிப்பை நேசித்தார். இயேசு நீதியான கிரியைகளை மட்டுமே செய்தார். அவர் மனிதர்களை அவர்களின் நோய்களிலிருந்து குணப்படுத்தினார், அவர்கள் இனி சாப்பிடக் கூடாத அளவுக்கு அற்புதமாக உணவளித்தார், அவர்களை பிசாசின் வல்லமையிலிருந்து விடுவித்தார், சிலரை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார்.
வாய்ப்பு கிடைக்குமானால், பாவம் நிறைந்த மனிதகுலம் என்றென்றும் முழுமையாக நேசிக்கும் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை கேலி செய்து, துப்பி, நிந்தித்து, கசையடி [சித்திரவதை] செய்து, கொல்ல முயற்சிக்கும்.
ஜனங்கள் மீது இயேசு ஊற்றிய எல்லையற்ற அன்பும் நன்மையும் அடைந்தப் பிறகு, ஆளுகையிலிருந்த ரோமானிய அதிகாரியான பிலாத்து, ஜனக்கூட்டத்தினரிடம் இயேசுவை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.
கூட்டத்தில் இருந்து வந்த பதில் இங்கே:
- மாற்கு 15:11 பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள். பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள். அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
பரிசுத்த தேவனை அவிசுவாசமும், நிராகரிப்பும் நிறைந்த ஒவ்வொரு இருதயமும் என்ன செய்ய விரும்புகிறது அல்லது அனுமதிக்கப்பட்டால் என்ன செய்யும் என்பதற்கான விளக்கம் பின்வருமாறு:
- மத்தேயு 27:27 அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள். அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
போர்வீரர்கள் இயேசுவின் கைகளையும் கால்களையும் கட்டி சிலுவையில் அறைந்தபோது, இயேசு பிதாவாகிய தேவனிடம் செய்த விண்ணப்பத்தை கவனமாகக் கவனியுங்கள்:
- லூக்கா 23:32 குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.
உண்மை: மனிதர்களும், பிசாசும் தங்கள் பிள்ளைகளுக்குப் பின்வருவனவற்றைக் கற்பிக்கிறார்கள் : உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.[மத்தேயு 5:43]
நமது அன்பான சிருஷ்டிகர் தம்முடைய பிள்ளைகளுக்கு நேர்மாறானதையே போதிக்கிறார்:[மத்தேயு 5:44] [இயேசு]
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச்செய்கிறார்களல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.
பின்வருபவை துக்ககரமான உண்மை: எனது, உங்களது மற்றும் ஒவ்வொரு மனித இருதயமும் உண்மையிலேயே இப்படியாக காணப்படுகிறது:
எரேமியா 17:9 [மனித] எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
- மாற்கு 7:18 அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
உலகில் பிறந்த அனைத்து மனிதர்களின் இயற்கையான முதல் பிறவி தீய மற்றும் கொடூரமான இருதயமே. பாவம் நிறைந்த மனித இருதயம் தங்கள் அயலகத்தாருக்கு தீங்கு விளைவிக்க உற்பத்தியாகும் “கனி”யாக இருக்கிறது:
- கலாத்தியர் 5:19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இந்த உண்மை உங்களுக்கு புரிகிறதா? நாம் அனைவரும் குற்றவாளிகள்! தேவனின் முழுமையான அன்பின் சட்டத்தை மீறிய நானும், நீங்களும் குற்றவாளிகளே:
நாம் நம்முடைய குற்ற உணர்வை என்ன செய்யப் போகிறோம்? தேவனுக்கும் நம் அயலகத்தாருக்கும் எதிராக ஒரு மீறுதல் [பாவம்] ஏற்பட்டவுடன், அதை அழிக்கவோ, மாற்றவோ அல்லது நம்மால் எதுவும் செய்ய முடியாது. அந்தச் செயல் மற்றும் பாவம்; நிலையானது, எழுதப்பட்டது. அது நியாயந்தீர்க்கப்பட வேண்டும்.
துக்ககரமாக, நீங்கள் கொடூரமானவர் என்று நினைத்த தேவன்; உங்களையும், என்னையும், மற்றும் அனைத்து மனிதர்களையும் நேசிக்கிறார், [பரிந்துரைக்கப்பட்டது]:
“நான் என் சொந்த சாயலில் உருவாக்கப்பட்ட என் சிருஷ்டிப்பை நேசிக்கிறேன். என் குமாரனாகிய இயேசுவின் ரூபத்தில் நானே வருவேன், என்னுடைய முழுமையான அன்பின் பிரமாணத்தை அவர்கள் மீறியதற்காக நியாயமான மரண தண்டனையை நான் செலுத்துவேன் என்று தேவன் கூறினார்.
என் குமாரனாகிய இயேசு, பரியாசத்தை அனுபவிக்கவும், துன்பப்படவும், சித்திரவதை செய்யப்படவும், கல்வாரி சிலுவையில் அறையப்படவும், அவரை விசுவாசித்து நம்புகிற யாவருக்கும் பதிலாக தாமாகவே முன்வந்து மகிழ்ச்சியுடன் சிலுவையில் மரிக்க தன்னை ஒப்புக்கொடுத்தார். இயேசுவை நம்புகிறவர்களின் எல்லா பாவங்களுக்காகவும், கர்த்தராகிய இயேசுவின் மரணத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் என்று பிதாவாகிய தேவன் கூறினார். இயேசுவின் மரணம் அவர்களுக்குப் பதிலாகப் போதுமானதாக இருக்கும், மேலும் அவர்களின் எல்லா பாவங்களையும், தீமைகளையும் நான் மீண்டும் ஒருபோதும் அவர்களுக்கு எதிராகக் கொண்டுவர மாட்டேன், இயேசுவை விசுவாசிப்பவர்கள் ஆக்கினை தீர்ப்பில்லாமல் பரலோகத்தில் என் முன் நிற்பார்கள் [ரோமர் 8:1], பரலோகத்தில் என்னுடன் என்றென்றும் பரிபூரண ஆனந்தத்தோடு வாழ்வார்கள்” [சங்கீதம் 16:11] என்றார்.
அன்பு நண்பரே, தன் சொந்த குமாரனைக் கொன்றவர்களாகிய மனிதர்களைக் கூட சிருஷ்டிகரான தேவன் நேசிப்பார் என்பது எந்த வகையான ஆழம் மற்றும் அன்பின் தரமாக இருக்கிறது? என்பதை பாருங்கள்
இந்தக் கேள்விக்கு இயேசு சொன்ன பதிலை பார்ப்போம் :
- யோவான் 15:13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
இந்த பூமியில் இப்படிப்பட்ட அன்பை உடையவர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? இல்லை! உங்களை இப்படி நேசிக்கும் ஒரு முழுமையான அன்பான தேவனைத் தவிர, யாரையும் உங்களால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது! மேலும், உங்களின் மங்கிப்போன, இருளான மனதில், நீங்கள் மனிதனின் கொடுமையைப் பார்க்க விரும்புகிறீர்கள், மேலும் அந்த கொடூரமான கொடுமையையும், அன்பற்ற அணுகுமுறைகளையும், செயல்களையும் உங்கள் முழுமையான அன்பின் சிருஷ்டிகருக்கு கற்பிக்கிறீர்கள்!
தேவனைப் பற்றித் தீமையாக நினைக்கும்படி பிசாசு உங்களை வலையில் சிக்க வைக்க விரும்புகிறான். சிருஷ்டி கர்த்தர், தம்முடைய குமாரனாகிய இயேசுவை நேசிப்பவர்களுக்கு என்ன வாக்குறுதி அளித்திருக்கிறார் என்பதை நாம் ஆராய வேண்டும்.
தேவன் மற்றும் நமது அயல்வீட்டுக்காரர் மீதான இந்த நம்பமுடியாத அன்பு உங்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி உண்மையானதாகவும் கிரியை நிறைந்ததாகவும் இருக்கும்? நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டியதாயிருக்கிறது [ஆவிக்குரியவர்களாக]!
- யோவான் 3:3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
உங்களுக்கு ஒரு புதிய “இயற்கைக்கு அப்பாற்பட்ட இருதயம் கொடுக்கப்பட வேண்டும்”:
- எசேக்கியேல் 36:26 உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். [ஆவிக்குரிய இருதயத்தால் தேவனின் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியும் மற்றும் தேவன் மீதும் உங்கள் அயலகத்தாரின் மீதும் காட்டும் அன்பின் கட்டளைக்கு கீழ்ப்படியக்கூடிய வல்லமையை பெறமுடியும்.]
- இந்த மறுபிறப்பு எப்படி நிகழ்கிறது? இது கடினமான, கரடுமுரடான இருதயத்தை உடைக்கும் பரிசுத்த ஆவியானவரின் பரிசாகும்: “நான் ஒரு நம்பிக்கையற்ற பாவி. எனக்கு நானே உதவி செய்ய முடியாது. என்னைக் காப்பாற்ற எனக்கு வெளியே ஒருவர் தேவை. நான் என் இரட்சகராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன்! தேவரீர் என்னை இரட்சியும்!” என்று அறிந்து கொள்வோம்!
- யோவான் 3:15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.”
ஒருவர் தங்கள் “புதிய ஆவிக்குரிய இருதயத்தை” பெறும்போது என்ன ஆதாரம் இருக்கும்? நிச்சயமாக, அது உண்மையாக இருக்க வேண்டும், தேவனையும், மற்றவர்களையும் நேசிக்க நமது இரட்சகர் இயேசுவைப் போல அன்பை செலுத்துவோம். கிறிஸ்துவைப் போன்ற அந்த அன்பினால் விளையும் அந்த “கனி” பின்வருமாறு:
- கலாத்தியர் 5:22-23 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்;
அன்புள்ள நண்பரே, உங்களுக்கான அன்பின் குறிப்பை நாங்கள் காட்ட விரும்புகிறோம்.
உங்கள் வாழ்வின் இந்த கட்டத்தில் உங்கள் சுய விருப்பத்துடன், நீங்கள் இயேசுவை நிராகரிக்கத் தேர்ந்தெடுத்திருந்தாலும், உங்கள் மீது கடவுளின் அளவிட முடியாத அன்பை நாங்கள் சரியாக அறிவித்துள்ளோம்.
உங்களுக்காக எங்கள் ஜெபங்கள் என்னவென்றால், இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தையையும், அழகையும் உங்களுக்கு வெளிப்படுத்த பரிசுத்த ஆவியானவர் மகிழ்ச்சி உள்ளவராய் இருக்கிறார், இது உங்கள் கடினமான மற்றும் கல்லான இருதயத்தைத் உடைத்து, இயேசுவின் அன்பு உங்களைக் குணப்படுத்தட்டும்.
ஆம், இந்த தற்போதைய உலகில் தீமை ஒவ்வொரு பக்கத்திலும் மனிதகுலத்தின் இருதயங்களின் மற்றும் மனதின் போரில் வெற்றி பெறுகிறது. ஆனால், இந்த மறுக்க முடியாத உண்மை வெறுமனே ஒரு மாயை மட்டுமே. தேவன் , தம்முடைய முழுமையான அன்பில், எல்லா மனிதகுலத்தின் தீமைகள், காயங்களிலிருந்து நித்தியமான குடும்பத்தை தனக்கென்று நித்தியத்திற்கு கொண்டுவருவதற்காக மகிழ்ச்சியோடு செயல்படுகிறார். அவர் இந்த அதிசயமான செயலை ஒரே நேரத்தில் ஒருவருடைய இருதயத்தில் செய்கிறார்.
இயேசு சிக்கீரமாக பூமிக்குத் திரும்பி வந்து தனது சிருஷ்டிகளுக்கு பூரண சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மீண்டும் கொண்டு வருவார். ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு எதிராக கலகம் செய்வதற்கு முன்பு இருந்த பூமியாகிய ஏதேன் தோட்டத்திற்குத் திரும்பும்படி செய்வார். அவர்களுடைய துரோகம் “பாவ வைரஸை” பிறப்பித்தது, அது அந்த நொடியிலிருந்து ஒவ்வொரு மனிதனையும் கொன்றது, அவர்கள் பரிசுத்த தேவனையும், அவர்கள் மீதான அவரது முழுமையான அன்பையும் நிராகரித்ததால் கற்பனை செய்ய முடியாத வலியையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்.
உங்கள் கேள்விக்கு நன்றி.
சத்தியமாகிய அன்பின் வடிவமான இயேசு கிறிஸ்துவைப் பார்ப்பதில் இந்த எண்ணங்கள் சில தெளிவை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், உங்கள் சிருஷ்டிகரான தேவனுக்கு நீங்கள் கடன்பட்டிருக்கிறீர்கள், அவர் ஒரு நாள் மரணத்தையும், வேதனையையும் முழுமையாக அழித்துவிடுவார்.
- வெளிப்படுத்துதல் 21:3-5 தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”
உங்களுக்காக, கிறிஸ்துவுக்குள் இணைந்து ஏராளமான சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஜெபிக்கிறோம்: – வெளிப்படுத்துதல் 22:20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.
மேலும் உங்களுக்கு உதவக்கூடிய சில தகவல்களைச் சேர்த்துள்ளோம். இதைத் தவிர உங்களுக்கு வேறு சில கேள்விகள் இருக்குமானால், எங்கள் தகவல் தொடர்பை பின்பற்றுங்கள், இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமான உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பை தெரிவித்துக் கொள்கிறோம்
ஜான் + பிலிஸ் + நண்பர்கள் @ WasItForMe.com