கட்டுரையைப் பகிரவும்
நற்செய்தியை கேட்காமல் மறைந்த நம் முன்னோர்களின் விதி என்னவாகும்?
பதில்: சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ? – ஆதியாகமம் 18:25.
உண்மை: நமது கடந்த காலத்தைப் பற்றியும், வேறு யாருடைய கடந்த காலத்தைப் பற்றியும் நாம் எதுவும் செய்ய முடியாது! உண்மை என்னவென்றால், தேவன் கட்டளையிட்டபடி இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்க நாம் இப்போது தேர்வு செய்வோமா, இந்த ஒரு நிகழ்காலத்தின் மீது மட்டுமே நமக்குக் கட்டுப்பாடு உள்ளது.
– மத்தேயு 17:5 “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்!”
நம் முன்னோர்களையோ, கடந்த தலைமுறைகளையோ பற்றி நாம் எதுவும் செய்ய முடியாது. இந்த உலகில் பிறந்த அனைவருடனும் பரிபூரண அன்புடனும், பரிபூரண இரக்கத்துடனும், பரிபூரண நீதியுடனும் நடந்துகொள்ளும் நமது பரிபூரண சிருஷ்டிகரின் கைகளில் அவர்களை ஒப்புக் கொடுப்போம்.
உங்களுக்கும் எனக்கும், இந்த உண்மைகளைப் படிக்கும் அல்லது கேட்கும் அனைவருக்கும், நீங்கள் தனிப்பட்ட முறையில் இயேசு கிறிஸ்துவை நம்புகிறீர்களா என்பதை அறிவது எல்லையற்றது மற்றும் நித்தியமாக முக்கியத்துவம் வாய்ந்தது, என்பதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இதை நாம் அறிந்தவர்களாகவே இருக்கிறோம். இது நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான கேள்வி மட்டுமல்ல, தேவனின் குமாரனான இயேசு கிறிஸ்துவை பற்றின உண்மையை அங்கீகரிப்பதும், நிராகரிப்பதும் உங்கள் பிள்ளைகளையும், எதிர்கால சந்ததியினரையும் பெரிதும் பாதிக்கும்.
தேவன் தம்முடைய எல்லா வழிகளிலும், தம்முடைய எல்லா குணாதிசயங்களிலும் பரிபூரணமானவர். அவருடைய இரக்கம் மற்றும் நீதியைப் போலவே அவருடைய அன்பும் உண்மையானது. மனிதர்களுடனும் தேவதூதர்களுடனும் அவர் கையாளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தேவன் தனது பரிபூரண அன்பு, இரக்கம் மற்றும் நீதியைப் பயன்படுத்தாமல் இருப்பது சாத்தியமற்றது.
தொகுக்கப்பட்டு இணைக்கப்பட்டவேதாகமங்களில் யோபு புத்தகம் தான் ஆரம்பகால எழுத்து என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள்.
தேவனைப் பற்றியும், இழந்து போன மனுக்குலத்திற்கு மீட்பு, ஒப்புரவாகுதல், இரட்சிப்பு, என்ற தேவனுடைய திட்டத்தை பற்றியும் யோபு நன்றாகவே அறிந்திருந்தார். யோபுக்கு இது எப்படித் தெரியும்? தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். [-ரோமர் 1:20] மற்றும் மெல்கிசேதேக்குபோன்ற மனிதர்களின் மூலம் [-ஆதியாகமம் 14:18].
ஆதியாகமம் 3:15-ல் வரவிருக்கும் மீட்பரைப் பற்றிய இந்த உண்மையை தேவன் அறிவித்தார், மேலும் இந்த உண்மையை மனிதகுலம் அனைவருக்கும் அறிவிப்பதை தேவன் ஒருபோதும் நிறுத்தவில்லை.
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன் என்றும் யோபு தனது புரிதலை உறுதியாக அறிவித்தார்.
தேவன் பொய் சொல்வது சாத்தியமற்றது. ரோமர் ஆகியோன் கூறியது போல ஆதாம், ஏவாளின் தலைமுறை முதல், ஒவ்வொரு தலைமுறையிலும் கூறப்படுவது உண்மையாக இருக்க வேண்டும். ரோமர் 1:20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
பவுல் பரிசுத்த ஆவியினாலே, ரோமர் 10:17-18 வசனங்களில் ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.” என்று அறிவித்தார்.
– ரோமர் 1:18-25 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
எனவே, நமது முன்னோர்களான யோபு, சோதோம் கொமோராவின் மக்கள், இதை பிரியமாய் கேட்டுக் கொண்டிருக்கும் உங்கள் முன்னோர்கள் என்று ஒவ்வொரு மனிதனுக்கும், இன்று தேவனுடைய வெளிப்பாடுகளை பார்த்து, கேட்டுக் கொண்டிருக்கும் அனைத்து மனிதர்களுக்கும், ஆத்மாக்களுக்கும் நாமே பொறுப்பாளிகளாக இருக்கிறோம். இது, நிச்சயமாக, நம் சொந்த தலைமுறையின் ஒவ்வொரு நபருக்கும் பொருந்தும்.
லோத்து வாழ்ந்த நகரத்தை கர்த்தர் அழிக்கப் போகிறார் என்பதை அறிந்தபோது, ஆபிரகாம் தனது சகோதரரின் மகனான லோத்துக்காக தேவனிடம் ஜெபிக்க தொடங்கினான்.
- ஆதியாகமம் 18:24-28 பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன். ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
10 ஆத்துமாக்களாக குறையும் வரை ஆபிரகாம் தேவனுடைய இரக்கத்தை கெஞ்சினான். சோதோமில் குறைந்தது 10 நீதிமான்களாவது இருக்க வேண்டும் என்று ஆபிரகாம் தனக்குத்தானே காரணம் கூறினாரா?
ஆதியாகமம் 18:32-33 அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.
- ஆதியாகமம் 19:12-17 பின்பு அந்தப் புருஷர் [தேவதூதர்கள்] லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள். அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது. கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள். அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
- 2 பேதுரு 2:6-8 சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து; அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; ( அந்த நீதிமான், அவர்களிடையே குடியிருந்து, அவர்களின் அக்கிரமச் செயல்களைக் கண்டும் கேட்டும் நாள்தோறும் தனது நீதியுள்ள இருதயத்தில் வேதனை பட்டு கொண்டிருந்தார்)-
- ஆதியாகமம் 15:6 அவன் [ஆபிரகாம்] கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
- கலாத்தியர் 3:8 மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
இப்பொழுது நீங்கள் இயேசுவை விசுவாசிப்பீர்களா? உங்கள் பிள்ளைகள் உங்களுக்கும் எங்களுக்கும் விலையேற பெற்றவர்கள். இயேசுவை விசுவாசிக்கும்படி அவர்களுக்கும் கற்றுக் கொடுப்பீர்களா?
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு இயேசுவைப் பற்றிச் கூறினால், அவர்கள் இயேசுவை விசுவாசித்தால், உங்கள் மரணத்திற்குப் பிறகு உங்களுடைய சரீரத்திற்கு என்ன நடந்தது என்று, எதிர்கால சந்ததியினர் ஆச்சரியப்படுவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் நித்தியத்தில் இருப்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
உங்களது சொந்த மரணத்தின் போது, நீங்களும் பவுலை போல தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த முடியும் என்பதை உணர்ந்து நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம்:
- 2 தீமோத்தேயு 4:7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
படிக்கவும்: நான் நம்புகிறேன்!
கிறிஸ்துவுக்குள் அனைவருக்கும் எங்கள் அன்பை தெரிவித்துக் கொள்கிறோம்
ஜான் + பிலிஸ் + நண்பர்கள் @ WasItForMe.com