“நீங்கள் தயாராக இருந்தால், தேவனும் தயாராக இருப்பார்!” இந்தக் கூற்றின் அர்த்தம் என்ன?
பதில்: நீங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கத் தயாராக இருந்தால், பிதாவாகிய தேவன் உங்களைத் தமது நித்தியமான குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாற்றத் தயாராக இருப்பார். நீங்கள் இந்த பூமியில் மரித்தபின்பு, இயேசு, பூரணமான ஆனந்தம், சமாதானம் மற்றும் அன்போடு அவருடன் நீங்கள் நித்தியமாக வாழும்படி, தம்முடைய பிதாவின் வீடாகிய பரலோகத்திற்கு உங்களைக் கூட்டிச் செல்லுவார்.
- யோவான் 3: 18-20 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
[பதிப்பாசிரியரின் குறிப்பு: முதல் மனிதனாகிய ஆதாமின் பாவத்தினால், எல்லா மனிதரும் இந்த உலகத்தில் பிறக்கும்பொழுதே பாவிகளாகப் பிறக்கின்றனர்.இயேசு கிறிஸ்துவின் ஆவியினால் அவர்கள் மறுபடியும் பிறக்கும் வரைக்கும் தொடர்ந்து தீய செயலகளைச் செய்துகொண்டேயிருப்பார்கள்]
- யோவான் 3:21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
[பதிப்பாசிரியரின் குறிப்பு: இதனால் தான் கிறிஸ்தவர்கள் பொதுவாகத் துன்பப்படுத்தப்படுகிறார்கள். இயேசு கிறிஸ்து அவர்களுக்குள்ளே இருக்கிறார். அவருடைய சத்தியம் எப்போதும் தீமையையும், இருளையும் வெளிப்படுத்தி அடையாளம் காட்டிவிடுவதால் உலகம் இயேசுவையும், அவருடைய ஒளியையும் வெறுக்கிறது. ஒளியாயிருக்கிற இயேசு கிறிஸ்து இப்போதும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். இயேசுவின் சத்தியமும், வெளிச்சமும் எல்லா மனிதர்மீதும் விழுகிறது. இயேசுவின் ஒளி ஒருவருடைய இருதயத்திலுள்ளதை வெளிப்படுத்தும்போது அந்த ஆணோ/பெண்ணோ அந்த ஒளியை விட்டு விலகி ஓடுவார் அல்லது அந்த ஒளியினிடத்தில் ஓடி வருவார்.]
- யோவான் 15:20 [இயேசு சொன்னார்] ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள்.
நீங்கள் இயேசுவில் விசுவாசமுள்ளவர்களாகும்போது என்ன நடக்கிறது?
நீங்கள் தேவனுடைய ஒரே குமாரனாகிய இயேசுவை விசுவாசித்தால், பரிசுத்த ஆவியானவராகிய தேவன் ஏற்கனவே மனந்திரும்புதல் என்ற பரிசை உங்களுக்கு வழங்கிவிட்டார்.
[பதிப்பாசிரியரின் குறிப்பு: மனந்திரும்புதல் என்பது உங்கள் பாவங்களுக்கு உங்கள் சொந்தச் செயல்களால் பரிகாரம் செய்யமுடியாது என்று அறிந்துகொள்ளுவது. இது உங்களைத் தவிர வேறொரு இரட்சகரில்லாமல் உங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று அறிந்துகொள்ளவைத்து, உங்கள் இருதயத்தில் தேவனை நோக்கி, “தேவனே, என்னிடத்தில் இரக்கமாயிரும், நான் ஒரு பாவி” என்று சத்தமிட வைக்கிறது.]
விசுவாசம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய தேவனிடமிருந்து எண்ணிலடங்காத பரிசுகளை நீங்கள் பெற்றுக்கொள்ளும் வழியாக இருக்கிறது. மனந்திரும்புதலும், விசுவாசமும் முதலில் கிடைக்கும் பரிசுகள். உடனடியாக அதைத் தொடர்ந்து அன்பு, சந்தோஷம், சமாதானம் என்று கணக்கற்ற பரிசுகள் வருகின்றன. இயேசுவின் ஆவியானவர் உங்கள் இருதயத்தில் பிறப்பதன்மூலம் இந்தப் பரிசுகள் உங்களுக்குக் கொடுக்கப்படுகின்றன.
- அப்போஸ்தலர் 20:20-21 பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து உபதேசம்பண்ணி, தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் [யூதரல்லாதவர்கள், புறஜாதியார்] சாட்சியாக அறிவித்தேன்.
உங்களது குற்ற உணர்வு, பயம் ஆகிய சங்கிலிகள் உடைக்கப்படும். இயேசுவை விசுவாசிப்பதன்மூலம் புதிய பிறப்படையும் கணப்பொழுதில், நீங்கள் சாத்தானின் பிள்ளையாக இருளின் ஆளுகையில் இருப்பதிலிருந்து விடுவிக்கப்பட்டு, உடனடியாக, தேவனின் பிள்ளையாக ஒளியின் ஆளுகைக்குள் கொண்டுவரப் படுவீர்கள்.
இந்தப் புதிய பிறப்பின் அனுபவத்தோடு அறிவுக்கெட்டாத சமாதானமும், சந்தோஷமும் கிடைக்கின்றன. உங்கள் கடந்த காலத்தின் குற்ற உணர்விலிருந்தும், எதிர்காலத்தைப் பற்றிய பயத்திலிருந்தும் நீங்கள் இப்போது விடுதலையாகிவிட்டீர்கள்.
இப்போது நீங்கள் “வேதம்/வசனம்/சத்தியம் என்ற ஒளியைவிட்டு விலகி ஓடாமல்”, அதற்குப் பதிலாக, உங்கள் இருதயத்தில் உங்களைக் குற்றப்படுத்தக்கூடிய காரியம் எதுவும் இல்லாதபடி முழுமையாக வெளிப்படுத்தப்பட அந்த ஒளியை நோக்கி ஓடிவருகிறீர்கள்.ஆம், உங்களுக்கு ஒரு உணர்வுள்ள மனச்சாட்சி என்ற பரிசும் கொடுக்கப்படுகிறது. அதனால், பழைய தீய பாவ குணம் உங்களுடைய ஒரு வார்த்தையிலோ, செயலிலோ வெளிப்பட்டால், நீங்கள் உள்ளமுடைந்து, கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த செயல் உங்கள் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால, கிறிஸ்துவுக்கு எதிரான தவறுதல்களுக்குப் பரிகாரம் செய்யப் போதுமானதாக இருக்கிறது என்று நம்பி, உங்கள் பாவம் மன்னிக்கப்பட்டது என்ற உறுதியைப் பெற்றுக்கொள்ள அந்த ஒளியினிடம் உடனடியாக ஓடிவருகிறீர்கள்.
உண்மை: நீங்கள் [எல்லா மனிதரும்] உலகத்தில் பிறக்கையிலேயே கடவுளால் குற்றவாளி என்று தீர்ப்பிடப்பட்டவர்களாகவே பிறக்கின்றீர்கள்! என்றோ ஒரு நாள் “பரலோகத்திற்குள் நுழைய தகுதி” பெறுவீர்களா என்று குறிப்பெடுத்து வைத்துக்கொண்டிருக்கும் புத்தகம் எதுவும் இல்லை. ஒளியை வெறுக்கிற ஒரு மனிதனாக இந்த உலகத்தில் நீங்கள் பிறப்பதால் நீங்கள் பிறக்கும்போது உங்களைப் பற்றிய கடவுளின் தீர்ப்பு ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது. மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உங்கள் சொந்த விருப்பம், உங்கள் சொந்த வழி, உங்கள் சொந்த நேரத்தில் நீங்கள் விரும்பும்படி எல்லாம் நடப்பது இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துவைத்திருக்கிறீர்கள். உங்கள் சிருஷ்டிகர் உங்களை அன்பிலும், நீதியிலும் ஆளுகை செய்வதை நீங்கள் விரும்பவில்லை.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காதவராகப் பிறந்திருக்கிறீர்கள்: இந்த உண்மையின் காரணமாக, பூமியில் வாழ்க்கையில் நீங்கள் என்ன செயல்களைச் செய்கிறீர்கள் என்பதைச் சாராமல், நரகத்திற்குப் போகும்படித் தீர்ப்பிடப்பட்டவராக நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்.
மகிமையான நற்செய்தி என்னவென்றால், உங்களுக்குக் கொடுக்கப்பட்டத் தீர்ப்பு மாற்றப்படமுடியும்! நீங்கள் உங்கள் நிலையை குற்றவாளியாகத் தீர்ப்பிடப்பட்டவர் என்பதிலிருந்து குற்றவாளியாகத் தீர்ப்பிடப்படாத மன்னிக்கப்பட்டவர் என்பதற்கு மாற்றிக்கொள்ளமுடியும். உங்கள் பாவங்கள் உங்களுக்கு எதிராக மீண்டும் கடவுளுக்குமுன் கொண்டுவரப்படவே படாது.
உங்கள் “பாவக் கணக்குப் பலகை” ஒரு கறுப்புப் புள்ளிகூட இல்லாமல் சுத்தமாக்கப்படும். பலகையிலிருந்து அழிக்கப்பட்ட உங்கள் பாவங்கள் இருந்த இடத்தில் இயேசு கிறிஸ்துவின் சொந்த நீதி எழுதப்படும். “ஆம், நான் நம்புகிறேன்!” என்று சொல்லும் ஒற்றை முடிவுக்குப் பதிலாக தேவன் கொடுக்கும் இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட அன்பின் பரிசுக்கு நிகரான எதுவும் இந்த அண்டசராசரம் முழுவதிலும் இல்லை.
- 2 கொரிந்தியர் 5:21 நாம் அவருக்குள் [இயேசு] தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை [இயேசு] நமக்காகப் பாவமாக்கினார்.
இருளின் ஆளுகைக்கு உட்பட்டவராக, சாத்தானின் பிள்ளையாக இருக்கும் ஒருவர், ஒளியின் ஆளுகைக்குள் சர்வ வல்லமையும் நீதியும் உடைய பரிசுத்த தேவனுடைய பிள்ளையாகக் கொண்டுவரப்படும் இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட மாற்றம் எப்படி நிகழ்கிறது?
– யோவான் 16:7 – 11 [இயேசு சொன்னார்] நான் போவேனேயாகில் அவரை [பரிசுத்த ஆவியானவர்] உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
ஒளி [இயேசுவைப் பற்றிய உண்மை] உங்கள்மீது வீசி, பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் உங்களைக் கண்டித்து உணர்த்தி, இயேசு தாம் சொன்னபடியே தேவனுடைய ஒரே குமாரன் என்று நீங்கள் விசுவாசிக்கும்போது, நீங்கள் மீண்டும் பிறக்கின்றீர்கள்! உங்கள் பாவங்களுக்கான கடனை இயேசு சிலுவையில் செலுத்திவிட்டார். அவர் அடக்கம்பண்ணப்பட்டு, மீண்டும் உயிரோடு எழுந்தார். உங்களுக்காக ஒரு இடத்தை ஆயத்தம் செய்ய பரலோகத்திலுள்ள பிதாவினிடம் அவர் சென்றிருக்கிறார். ஏன்? ஏனென்றால், இயேசு உங்கள்மீது அன்புள்ளவராக, நித்தியம் முழுவதும் உங்களோடு இருக்க விரும்புகிறார்.
எல்லா மனிதரும், ஒளி அவர்களது இருளான இருதயங்களில் வீசுகையில் இரண்டு காரியங்களில் ஒன்றைத் தேர்வு செய்யவேண்டிய சூழ்நிலையைச் சந்திக்கிறார்கள்: 1.) விசுவாசத்தோடும், மனந்திரும்புதலோடும் ஒளியிடம் [இயேசு கிறிஸ்து] ஓடி ஒளியைப் பற்றிக்கொள்வது 2.) நீங்கள் உங்கள் பாவத்தை நேசிப்பதால், ஒளியைவிட்டு விலகி ஓடுவது.
நீங்கள் ஒரு “மார்த்தாளாய்” இருப்பீர்களா?
– யோவான் 11:21 – 27 மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள் [மார்த்தாள் இயேசுவிடம்]: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
நீங்கள் ஒரு “பேதுருவாக” இருப்பீர்களா?
– மத்தேயு 16:15-17 அப்பொழுது அவர் [இயேசு]: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே [பேதுரு], நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
- மத்தேயு 19:27-29 அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயம் தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;
அனைவருக்கும் எங்களது முழு அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்
கிறிஸ்துவில்,
Jon+ Philis+ Friends@ WasItForMe.com