“ஆதியிலே” – இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன?
-யோவான் 1:1-5
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
பதில்: “ஆதியிலே” என்ற வார்த்தை நாம் சிந்திக்கும்விதத்தில் “நேரம்” என்பதன் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராகிய தேவன் மட்டுமே இருந்து, அவர்கள் மட்டுமே, நேரம், இடைவெளி, இந்த அண்டசராசரம், அதிலிருப்பவைகள் உட்பட எல்லாவற்றையும் சிருஷ்டிக்கத் தொடங்கினார்கள். நித்தியத்தில் தேவன் புதியதாக உருவாக்கின “நேரம்” என்ற ஒரு அம்சத்தில், எல்லாவற்றையும் இருக்கும்படி அவர் கொண்டுவந்தார்.
தேவத்துவத்தின் பகுதிகளாகிய பித, குமாரன், பரிசுத்த ஆவியானவர் மூவருக்குமே இந்தச் சிருஷ்டிப்பில் ஒரு பங்கு இருந்தது என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது.
சிருஷ்டிப்பு பிதாவின் சித்தம் என்றும், சிருஷ்டிக்கும் செயல்பாடு குமாரனாகிய தேவனுக்கும் பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கும் கொடுக்கப்பட்டது என்று வேதம் மேலும் நமக்கு விளக்குகிறது.
பரிசுத்த ஆவியானவரின் கீழ்ப்படியும் வல்லமையின் மூலமாக, குமாரனாகிய தேவன் இந்த உலகத்திற்கு வந்து, இயேசு என்று அழைக்கப்பட்டார் என்று வேதம் மேலும் விளக்குகிறது. இயேசு ஒரு கன்னிகையின்மூலம் பிறந்து உண்மையாக தேவனாகவும், உண்மையாக மனிதனாகவும் இருந்தார். இழக்கப்பட்டுப்போன பாவம் நிறைந்த மனுக்குலத்தை மீட்டு, மீண்டும் பிதாவோடு ஒப்புரவாக்கி, தமது நித்திய குடும்பத்தின் உறுப்பினர்களாக மாற்றும் மிகவும் அவசியமான ஒரு நோக்கத்திற்காக இயேசு வந்தார்.
இயேசு, நித்தியமானவராக இருந்தும், தமது முழுமையான தெய்வீகத் தன்மையோடு, முழுமையான மனிதத் தன்மையையும் இணைத்து, தமது மனித சிருஷ்டிகள் அனுபவிக்கும் அனுதின பாவச் சலனங்கள் போன்ற எல்லா அனுபவங்களையும் அனுபவித்தார். பாவிகளாகிய ஆண்களுக்கும், பெண்களுக்கும் நியாயமாக அளிக்கப்படவேண்டிய மரண தண்டனைக்குப் பதிலீடாக தம்மையே மரிப்பதற்குக் கொடுத்தார். இப்படியாக, இயேசு இந்த அண்டசராசரம், பூமி மற்றும் மனுக்குலத்தின் சிருஷ்டிகர் மட்டுமல்ல, அவரை நம்பி, விசுவாசித்து, நேசிக்கும் எல்லோரையும் தேவனிடம் மீண்டும் சேர்க்கும் தொலைந்துபோன மனுக்குலத்தின் மீட்பரும் இரட்சகருமாவார்.
தம்முடைய குறைவற்ற சிருஷ்டியை பாவம் மீண்டும் அழிக்கமுடியாத ஒரு புது உலகத்தை
இயேசு ஒரு நாள் சிருஷ்டிப்பார்.
இன்று நமது வேத பகுதியில் எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகரான இயேசு வார்த்தை என்று அழைக்கப்படுகிறார்.
- யோவான் 1:1-2
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
இயேசு என்ன சிருஷ்டித்தார்? பதில்: எல்லாவற்றையுமே!
- கொலோசெயர் 1:16,17 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
- யோவான் 1:3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
இயேசு எப்படி அண்டசராசரத்தைச் சிருஷ்டித்தார்? “தேவன் பேசினார்!” தேவன் தமது சித்தத்தை வெளிப்படுத்தினார். உடனே அவருடைய வார்த்தையினால் எல்லாமே உருவாகின.
- ஆதியாகமம் 1:3 – 5 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
தமது மனிதச் சிருஷ்டிகளின் வாழ்வில் இயேசு இன்றும் ஒளியைப் படைத்துக்கொண்டிருக்கிறாரா? பதில்: ஆம்!
- யோவான் 8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய தேவத்துவத்தின் சிருஷ்டிக்கும் பகுதியான இயேசு தமது சாயலின்படியே மனிதர்களைச் சிருஷ்டித்தார்.
- ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
மனிதர்களுக்கு நித்தியம், உணர்வுகள், சிருஷ்டிக்கும் ஆற்றல் மற்றும் ஆளுகை செய்யும் அதிகாரம் ஒரு வரையறைக்குட்பட்டச் சுயசித்தத்தோடு, தேவனுடைய சர்வ அதிகாரம்படைத்த வரையறையில்லாத சுயசித்தத்துக்குக் கட்டுப்பட்டுச் செயல்படக்கூடிய விதத்தில் கொடுக்கப்பட்டது.
- பிரசங்கி 3:11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.
தேவன் ஆண்களையும், பெண்களையும் படைத்தபோது அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்திருந்தாரா? பதில்: ஆம்!
ஒரு மனிதனுக்குள்ளே புதிய வாழ்க்கையை தேவன் இன்று எப்படிச் சிருஷ்டிக்கிறார்? பதில்: தேவனுடைய ஆவியிலிருந்து அது பிறக்கிறது!
- யோவான் 3:5-8 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
மறுபடியும் பிறப்பதற்கு, உலகத்தின் பாவங்களுக்காக மரித்த இயேசுவின் வாழ்வையும், அவர் செய்துமுடித்த செய்லையும் ஒருவர் விசுவாசிக்கவேண்டும்.
- யோவான் 19:30 இயேசு காடியை வாங்கினபின்பு, “முடிந்தது!” என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
-யோவான் 3: 14-17 [இயேசு சொன்னார்] மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும் [சிலுவையில் அறையப்படவேண்டும்]. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
மனிதர்களின் இருதயங்களில் இருக்கும் இந்த “நித்தியம்” அவர்கள் தேவனைத் தொழ விரும்பும்படிச் செய்கிறது. இது “உணர்வுள்ள இருதயத்தில் ஒரு துவாரத்தைப்போல இடைவெளியைப்போலச்” செயல்பட தேவன் மனுக்குலத்திற்கு உருவாக்கிக்கொடுத்த ஒரு பரிசாகும்.
இருதயத்தில் இருக்கும் இந்த வெறுமையானது தங்கள் சிருஷ்டிகருக்கு அன்புடன் கூடிய கீழ்ப்படிதலோடு சேவை செய்யவும், அவரோடு இணைந்திருக்கவும் விரும்பும்படி மக்களைக் கடவுளை நோக்கி ஈர்க்கிறது. இந்த அழைப்பை, மனிதர்கள், தங்கள் சுயசித்தத்தின்படி செய்யும் தேர்வின்மூலம், ஏற்கின்றார்கள் அல்லது தள்ளிவிடுகின்றார்கள்.
மனிதன், பாவம் நிறைந்த விழுந்துபோன நிலையில், இருதயத்தில் இருக்கும் இந்த வெறுமையை பரிசுத்த தேவனைத் தவிர வேறொன்றைக் கொண்டு நிரப்ப முயற்சி செய்யும்படி தன் சொந்த விருப்பம் மற்றும் “சுயசித்தம்” இவற்றை மட்டுமே கொண்டிருக்கிறான்.
இருதயத்தில் இருக்கும் இந்த வெறுமையை மனிதன் பணம், பெருமை, அந்தஸ்து, படிப்பு, உறவுகள், அசுத்தமான பாலியல் உறவுகள் போன்ற உடல்ரீதியான காரியங்களால் நிரப்ப முயற்சி செய்கிறான். சந்தோஷத்தைத் தேடுவதும், கஷ்டங்களைவிட்டு விலகி ஓடுவதும் மனிதனின் அடிப்படை இயல்புகளாக இருக்கின்றன.
ஆதாமும், ஏவாளும் பாவம் செய்தபோது, இந்த தூய்மையானதும், ஆச்சரியமானதுமான தேவனைத் “தொழுதுகொள்ளும் ஆசை” மாசுபட்டு, “தங்களுக்குத் தாங்களே கடவுளாகி, தங்களையே தொழுதுகொள்ளும்” ஒரு துயர் நிறைந்த ஆசையாக உருக்குலைந்துபோனது.
.
- சங்கீதம் 51:10 சங்கீதக்காரன் தான் பாவம் செய்தபின் கூறினார், “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” தமது விழுந்துபோன, பாவம் நிறைந்த சிருஷ்டிகளுக்கும் அது தான் தேவன் செய்யவேண்டிய காரியமாயிருக்கிறது.
நம்முடைய முதல் பெற்றோரான, ஆதாமும், ஏவாளும் பாவம் செய்தபோது, மனிதருக்குள்ளே இருந்த தேவனது வெளிச்சம் அணைந்துபோனது. முற்றிலும் தங்களையே மையமாகக் கொண்ட, உலகத்தில் தங்களுக்குத் தாங்களே “கடவுள்களாக” இருக்கும் ஆசையுடன் தேவன் இருக்கிறார் என்ற உணர்விலிருந்து பிரிக்கப்பட்ட வாழ்க்கையையே எல்லா மனிதரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவின் ஆவியில் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய இரண்டு அதிகபட்ச முக்கியத்துவம் வாய்ந்த கட்டளைகளை மனிதர் தொடர்ந்து மீறீக்கொண்டே இருப்பார்கள்.
- மாற்கு 12:30-31 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
இயேசுவைப் பற்றி உண்மையென்று நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவே நீங்கள் சிந்திக்கக்கூடிய மிக முக்கியமான சிந்தனையாக இருக்கிறது என்பதை இப்போது காண்கிறீர்களா?
பாவம், உலக ஆசைகளுக்கு அடிமைத்தனம், குற்ற உணர்வு மற்றும் பயம் இவைகளிலிருந்து விடுதலை பெறுவது முற்றிலுமாக இயேசு கிறிஸ்துவைச் சார்ந்தே இருக்கிறது. ஒரு தனிமனிதன் தனது சொந்த விருப்பம், சுயசித்தம் இவற்றைப் பயன்படுத்தி இயேசுவை விசுவாசித்து, அவர்மேல் தன் நம்பிக்கையை வைக்க முடிவுசெய்யும் செயலின் வழியாக மட்டுமே இயேசுவின் இரட்சிக்கும் அன்பு அவனிடம் வருகிறது.
தம்மை விசுவாசித்து, தம்மில் அன்புகூருமாறு உங்களுக்கான தமது சித்தத்தையும், தமது வார்த்தையையும் தெரிவித்திருக்கும் இயேசுவின் அழைப்புக்கு செவிகொடுப்பீர்களா?
இந்த வாழ்க்கையையே மாற்றும் உண்மைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளத் தங்களுக்கு உதவியாக இருந்தது என்று பலர் சொன்ன, ஒரு எளிய “வழிகாட்டும் வரைபடத்தை” உங்களுக்கு உதவுமாறு தயாரித்து, இங்கே இணைத்திருக்கிறோம்.
NoOtherNamehttps://vimeo.com/924125840
[PDF]IBelieve!https://wasitforme.com/wp-content/uploads/2024/03/I-Believe.pdf
இந்த உண்மைகள் உங்கள் இருதயத்தை இன்று தொட்டிருந்தால், எழுந்து ஒரு புது வாழ்விலும், சுதந்திரத்திலும் நடக்குமாறு இயேசு தெரிவித்த அவருடைய சித்தத்திற்குச் செவிகொடுக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், தயவு செய்து, இயேசுவை விசுவாசித்து, அவரைப் பின்பற்றுமாறு உங்களுக்கு இருக்கும் ஆசையைப்பற்றி எங்களுக்கு எழுதி, விவரித்துச் சொல்லி எங்களை ஊக்குவிப்பீர்களா?
உங்களுக்காக ஜெபம் செய்து இதை உங்களுக்கு அனுப்பி இருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கவேண்டுமென்று நீங்கள் விரும்பினால், எங்களுக்கு எழுதி உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள்.
கிறிஸ்துவில் அனைவருக்கும் எங்களது முழு அன்பையும் தெரிவிக்கும்,