And he said, “Jesus, remember me when you come into your kingdom.” - Luke 23:42

கர்த்தருக்குள் என் அழைப்பை நான் எவ்வாறு புரிந்துகொள்வது மற்றும் அறிந்துகொள்வது?

Share Article

வாழ்க்கை என்பது ஒரே சுவாசம், ஒரே நோக்கம் மற்றும் ஒரே நடையை கொண்டுள்ளதாகும். கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கை என்பது தேவனை மகிமைப்படுத்துவதும், அவரில் என்றென்றும் மகிழ்ந்திருப்பதுமே ஆகும். “ஒரே நோக்கமான” மனிதனின் முக்கிய குறிக்கோளை குறித்து பல நூற்றாண்டுகள் பழமையான பிரகடனமாகக் குறைப்பதில் நாம் பலருடன் இணைவோம்:

உங்கள் அன்றாட வாழ்க்கை நோக்கத்தை உருவாக்க உதவும் ஒரு எளிய நடைமுறை விளக்கமாக, பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட வாழ்க்கையின் வழிகாட்டுதல்களை நோக்கி பார்ப்போம். 1 தெசலோனிக்கேயர் 5:16-18 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை நேசிக்கும் அனைவரும், அதாவது அவரை நேசிக்கவும், பின்பற்றவும் விரும்பும் அனைவரும் நமது பரலோக பயணத்தில் “தேவ சித்தத்தின் மையத்தில்” இருக்கிறோம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பொய் சொல்ல முடியாத பரிசுத்த ஆவியின் இந்த மூன்று எளிய கட்டளைகளை நாம் அறிந்திருக்கும் போது, தேவனுடைய சித்தத்தின் மையத்தில் இருக்கிறோம் என்பதில் முழுமையான நம்பிக்கையைப் பெறலாம்.

பரிசுத்த ஆவியானவருடைய ஊக்கமளிக்கும் வார்த்தைகளிலிருந்தும், நம் சக கிறிஸ்தவர்களிடமிருந்தும் உதவி பெறலாம். உதாரணமாக, பிரான்சிஸ் ஹேவர்கல் கிறிஸ்துவை நேசிக்கும் நோக்கத்தையும், பரலோகப் பாதையையும் கொண்ட சில பாடல் வரிகளை அழகாக படம் பிடித்து இருக்கிறதை காண்போம்:

எந்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக ஆளுமே

பிரான்சிஸ் ஆர். ஹேவர்கல் (1874)

எந்தன் ஜீவன் இயேசுவே சொந்தமாக ஆளுமே

எந்தன் காலம் நேரமும் நீர் கையாடியருளும்.

எந்தன் கை பேரன்பினால் ஏவப்படும்; எந்தன் கால்

சேவை செய்ய விரையும் அழகாக விளங்கும்.

எந்தன் ஆஸ்தி, தேவரீர் முற்றும் அங்கீகரிப்பீர்;

புத்தி கல்வி யாவையும் சித்தம்போல் பிரயோகியும்.

இயேசுவை மையமாகக் கொண்ட ஒரு வாழ்க்கையைப் பற்றியதான பரிசுத்த ஆவியின் பதிவை இணைக்க முயற்சித்திருக்கிறோம், இது உங்கள் சிறந்த கேள்விக்கு பதிலளிக்க கூடியதாக இருக்கும், மரியாளின் முன்மாதிரியை நினைவில் கொள்ள பிரான்சிஸ் ஹேவர்கல் எவ்வாறு ஒரு அழகான கவிதை முயற்சியை நமக்கு வழங்கினார் என்பதைப் பார்ப்போம்:

– யோவான் 12:3-7 அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான். அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள் என்றார்.

அவற்றைப் பற்றியதான மகிமையின் அலங்காரத்தை குறித்து சில எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட வார்த்தைகள் உள்ளன, அவற்றை நம் மனதில் ஏற்றுக்கொள்ளும்போதும், அவற்றின் அர்த்தத்தின் நம்பமுடியாத ஆழத்தை சிந்திக்கும்போதும் மரியாதைக்குரிய மௌனத்திற்கு நாம் உந்தப்படுகிறோம்.

பின்வரும் ஜி. கேம்பல் மோர்கனின் மேற்கோள் இன்று உங்கள் கேள்வியின் ஆழத்தை நன்கு புரிந்துகொள்ள நமக்கு உதவும்:

“. . பெத்தானியாவில் வாசம் செய்த மரியாள், இயேசுவை அவரது அடக்கத்திற்கு ஆயத்தம் பண்ணினாள், இயேசுவின் முகத்தில் காணும் நிழல்களைப் பார்க்கும் பெண்ணின் இதயம் மற்றவர்களை விட என்ன ஒரு தெளிவு நிறைந்த கூர்மையான உள்ளுணர்வை எதிர்கொண்டது, அவள் பார்த்ததையும் புரிந்துகொண்டதையும் அவருக்குச் சொல்லக்கூடிய ஒன்றைச் செய்ய அவள் விரும்பினாள், விவேகத்தின் அனைத்து எல்லைகளையும் உடைத்து, அவள் இயேசுவின் கால்களிலும் தலையிலும் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தை ஊற்றினால், இயேசு சொன்னது நிறைவேற, அவரை அவருடைய அடக்கத்திற்கு ஆயத்தம் பண்ணினாள்.

“மற்றவர்கள் பார்த்ததை விட அவருடைய முகத்தின் நிழல்களைப் பார்ப்பது” என்ற சொல் மிகவும் ஆழமான உண்மை, மேலும் அது மிகவும் விரும்பப்பட வேண்டிய மற்றும் வேண்டிக் கொள்ளப் பட கூடிய ஒரு பண்பு ஆகும்.

யோவான் 12 இல் உள்ள இந்த அழகான பகுதி, நாம் வீழ்ச்சியடைந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது, மேலும், கிறிஸ்துவின் முகத்தை நாம்தெளிவாக காண விட்டாலும், அவரை மகிமைப்படுத்தக்கூடிய வழிகளைத் தேடவும், அவர் மறுபடியும் வரும்வரை இழந்து போன ஆத்துமாக்களை மீட்பதற்கான அவருடைய சித்தத்தைச் புரிந்து கொண்டு செயல்படுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.

உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய வேதனையை எதிர்கொண்ட இயேசு, உலகத்தின் பாவம் அவர் மீது சுமத்தப்பட்டதைப் போலவே, பரிசுத்த தேவனாகிய அவரது பிதாவினிடத்திலிருந்து பிரிந்து ஒரு மனிதனாக துன்பத்தையும் பிரிவினையையும் எதிர்கொள்ள அவர் அழைக்கப்பட்டார் என்பதை அறிந்திருந்தார்.

இயேசுவின் வாழ்க்கையின் கடைசி சில நாட்களில், பிதாவாகிய தேவன் மரியாளுக்கு இயேசு எதிர்கொள்ள போகும் விஷயங்களை உணரும் உணர்வையும், சாத்தியமான அனைத்து ஆறுதல் மற்றும் ஊக்கத்தையும் வழங்குவதற்கான விருப்பத்தையும் வழங்கினார்.

இதில் இனிமையான உணர்வுகளை புரிந்து கொண்ட மரியாள் இயேசுவின் முகத்தைப் பார்க்கிறாள், ‘வலியின் நிழல்களை’ காண்கிறாள், அவளுடைய இதயம் தன் மனதிற்குள் கூக்குரலிடுவதை நாம் கற்பனை செய்ய முடியும், ‘ஐயோ, நான் என்ன செய்ய முடியும்? இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணத்தை எதிர்கொள்கிறார், அதை அவர் நமக்குத் தெளிவாக அறிவித்துள்ளார். தேவனின் வேலை முடிவடைவதற்கு இவை நடக்க வேண்டியதாய் இருக்கிறது, ஆனால், ஐயோ, இப்போது அவரை ஆறுதல்படுத்த நான் என்ன செய்ய முடியும்?’

நிச்சயமாக, மரியாளின் இதயம் வரவிருக்கும் மரணத்தை சித்தரித்தது, அவளுடைய மனம் அடக்கம் செய்யும் செயல்முறையைப் பற்றி யோசித்தது. அவளுடைய இதயமும் சிந்தையும் ஒரு உறுதியான ஆராதனையில் ஒன்றிணைந்து, “நான் என் அன்பை என் இரட்சகரிடம் ஊற்றுவேன். விலையேறப்பெற்ற என்னுடைய செல்வம் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, அந்த விலை உயர்ந்த வாசனை திரவியத்தை இயேசுவின் தலையிலும் பாதங்களிலும் ஊற்றுவேன். ஒருவேளை அவர் கடந்து செல்ல வேண்டிய வேதனையான பாதையில் ஆறுதலையும் ஊக்கத்தையும் பெறுவார்” என்று கூறுவதை கற்பனை செய்வது எவ்வளவு எளிது.

மரியாள் தனது எதிர்கால பூமிக்குரிய பாதுகாப்பை (விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில்) ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.

இந்த ஆராதனையின் செயலும், உணர்ச்சிபூர்வமான புரிதலும் இயேசுவை மகிழ்ச்சியடையச் செய்தது, ஏனெனில் அவருடைய பாதங்கள் விரைவில் சிலுவையில் அறையப்படும் என்பதையும் அவர் முழுமையாகப் புரிந்துகொண்டார்.

அவரது தலையில் இருந்த முள் கிரீடத்திலிருந்த அடிகள் மற்றும் காயங்களுடன், அவரது துளைக்கப்பட்ட பாதங்களிலிருந்து வழிந்த இரத்தத்துடன் கலந்த அந்த விலைமதிப்பற்ற தைலத்தின் தடயங்களை ஒருவர் எளிதாக கற்பனை செய்யலாம்.

ஆம், இயேசு, சிலுவையின் மரணத்திற்கு தேவையான விலைக்கிரயத்தை முழுமையாகப் அறிந்திருந்தார். மனுஷகுமாரனாகிய இயேசுவின் மரணம், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என்னும் ஒரே கர்த்தரை உள்ளடக்கியது.

கர்த்தராகிய இயேசுவின் உன்னதமான அர்ப்பணிப்பாகிய சிலுவையின் மரணம் நமக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால், நாம் விரும்பும் அனைத்தையும் அவரைப் போல இழக்க நேரிடலாம்.

உங்கள் சிறந்த கேள்வி: கர்த்தருக்குள் என் அழைப்பை நான் எவ்வாறு புரிந்துகொள்வது மற்றும் அறிந்துகொள்வது?

உங்கள் அன்றாட பதில்: நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, மற்றும் தேவன் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்த அனைத்தையும் இயேசுவிடம் திருப்பிக் கொடுப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் தினமும் உங்களை வழிநடத்துமாறு கேட்கத் தொடங்குங்கள்.

இயேசுவின் மீதுள்ள தனது அன்பைக் காட்ட வேண்டும் என்ற ஆசையில், மரியாளும், பிதாவாகிய தேவன் தன் கைகளில் வைத்திருந்ததை எடுத்து இயேசுவிடம் திருப்பிக் கொடுத்தாள். அவளிடம் என்ன கொடுக்க இருந்தது? 1.) அவளுடைய பண்புகள். 2.) பாசம் / அன்பு. 3.) நேரம். 4.) திறமைகள். 5.) பொக்கிஷங்கள்.

மரியாளுடைய அன்பின் செயலைக் கவனிக்கும்போது, ​​இயேசுவின் முகத்தில் இருந்த “துக்கத்தின் வரிகள்” சிறிது மென்மையாக மாறுவதை கற்பனை செய்வதற்கு அதிக முயற்சி தேவையில்லை. நிச்சயமாக இயேசு, தனது சர்வ ஞானத்தினால், மரியாளின் அன்பான பக்திக்குரிய செயலில், அவர் மீது தங்கள் அன்பை ஊற்றுகிறதான “எண்ணற்ற எண்ணிக்கையிலான எதிர்கால “மரியாளுடைய யோவானுடைய” முகங்களின் தோற்றங்களைக் காண்பார்.

வருகிற நாட்களில் கிறிஸ்துவை நேசிப்பவர்கள் அவர் மீது தங்கள் அன்பை எப்படி ஊற்றுவார்கள்? இழந்துபோன ஆத்துமாக்களின் மீது கொண்டுள்ள அன்பினாலும், கரிசனையாலும் அவர்கள் பூமியில் இயேசு கூறிய கடைசி கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அதைப் பின்பற்றுவார்கள்:

– மாற்கு 16:15-16 15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான் என்றார்.

நம் வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தத்தின் மையத்தில் இருப்பதை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழி, இதுவரை சொல்லப்பட்ட மிகப்பெரிய அன்பின் சரித்திரத்தை முடிந்தவரை பலருக்குச் சொல்வதே என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்! குற்றவாளிகளுக்காக (உங்களுக்கும் எனக்கும்) மரித்த குற்றமற்றவரை பற்றி [இயேசு] எங்கள் தலைமுறைக்கு நாங்கள் சொல்கிறோம், இதனால் குற்றவாளிகள் மன்னிக்கப்பட்டு பூமியில் மரித்த பின் பரலோகத்தில் தேவனுடன் என்றென்றும் பரிபூரண மகிழ்ச்சியோடும் சமாதானத்தோடும் வாழ முடியும்..

அன்புள்ள நண்பரே, இந்த குறிப்பில் நாம் முதலில் குறிப்பிட்ட கட்டளையுடன் வரும் ஆசீர்வாதத்தை ஒருவர் அன்றாட அனுபவத்தில் அறிய இந்த நோக்கம் காரணமாகிறது: – 1தெசலோனிக்கேயர் 5:16-18 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

“கர்த்தருக்குள் என் அழைப்பை” பற்றி அறிந்திருப்பதை குறித்து யாரும் சிறிதும் குழப்பமடையத் தேவையில்லை!

உங்கள் இரட்சகரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள உங்களுடைய அன்பை குறித்து ஒவ்வொரு நாளும் பலருக்கு தெரிவியுங்கள், .

இயேசுவின் மீதுள்ள நம் அன்பை நாம் பகிரங்கமாக அறிவித்தவுடன், பரிசுத்த ஆவியானவர் “நம் அன்பின் நறுமணத்தையும், சத்தியத்தின் விதையையும்” எடுத்துக்கொண்டு, நம்மால் இரட்சிக்கப்பட்டு பரலோகத்திற்குக் கொண்டுவர முடிவு செய்யும் எவரையும் நிரப்பும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.

இதைத்தான் மரியாள் செய்தாள். அவள் தன்னிடம் இருந்த அனைத்தையும் எடுத்து, ஆராதனையாக தன் இரட்சகருக்குக் கொடுத்தாள் என்பதை நாம் பார்த்தோம் . . அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.

WasItForMe.com என்ற தளம் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள தேவனால் ஏவப்பட்ட வார்த்தைகளை வீடியோ வடிவத்தில் தயாரிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விசாரிப்பவர்களின் கேள்விகளுக்கு ஏற்ற பதில்களை நாங்கள் கொடுக்க விரும்புகிறோம்.

உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய சில வீடியோக்களை இங்கு இணைத்திருக்கிறோம். அவை உங்களை ஊக்கமளிப்பதாக நீங்கள் நினைத்தால், நீங்கள் நேசிப்பவர்களுக்கும் உங்களால் தொடக்கூடிய மற்றவர்களுக்கும் அவற்றை அனுப்பத் தொடங்குங்கள். நீங்கள் அவற்றை அனுப்பும்போது மற்றவருக்காக ஜெபியுங்கள், இதனால் தேவனுடைய நாமம் மகிமையடையும், இந்த “நறுமணத்தை” அன்பான ஆராதனையின் செயலாகப் பயன்படுத்த பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள்.

எங்கள் பிரியமான நண்பரே, உங்கள் சிறந்த கேள்விக்கான பதிலை காணும் போது: கர்த்தரிடத்தில் என் அழைப்பை நான் எவ்வாறு புரிந்துகொண்டு அறிந்துகொள்ள முடியும்?

இந்தக் குறிப்பு உங்கள் இதயத்தில் எதிரொலிக்கிறதா? என்பதை தயவு செய்து எங்களுக்கு எழுத்தின் வடிவத்தில் தெரிவியுங்கள். உங்கள் வாழ்க்கைக்கான அழைப்பை அறிய நீங்கள் விரும்பியதற்கு எங்கள் நன்றியை தெரிவித்து, உங்களுக்காக நாங்கள் ஜெபித்தோம். உங்களிடத்தில் ஒப்புவித்ததை, கர்த்தரும் இரட்சகருமாகிய உங்களுடைய தேவனிடத்தில், நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அவர் உங்கள் கைகளில் கொடுத்த அனைத்தையும், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு அதை தேவனிடத்தில் திருப்பிக் கொடுக்க நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள் என்று நாங்கள் ஜெபிக்கிறோம்.

கிறிஸ்துவுக்குள் உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பு,

ஜான் + பிலிஸ் + நண்பர்கள் @ WasItForMe.com

சிலுவையில் அறையப்பட்டவர்கள் 3 பேர், அவர்களில் குற்றவாளிகள் 2 பேர் மட்டுமே.

“நீங்கள் விசுவாசிப்பீர்களா!”

“தேவனுடைய அன்பு”

You might also like

Was It For Me_It Is Matter Of What We Love Essay Image
Essay

It is a matter of what we love

Why is our culture overwhelmed by: Malformed Relationships, Materialism / Debt / Violence, Addiction to Media / Entertainment? Actually, the answer is…

Was It For Me_Heaven It Is Impossible for God to Lie Essay Image
Essay

Heaven, it is impossible for God to lie

So that by two unchangeable things, in which it is impossible for God to lie, we who have fled for refuge might have strong encouragement to hold fast to…

Would you pray for me?

Complete the form below to submit your prayer request.

* indicates required

Join our email list

To sign up for daily meditations, please complete the form below.

Would you like to ask us a question?

Complete the form below to submit your question.

* indicates required