தேவ அன்பு என்பது என்ன?
தேவனின் அன்பைக் குறித்து நீங்கள் எனக்குக் கூறமுடியுமா?
ஆம்! அப்போஸ்தலனாகிய யோவான் நமக்கு எழுதிய கடிதங்களில் தேவனின் அன்பைக் குறித்த அழமான, தெளிவான விளக்கங்கள் உள்ளன. 1 யோவான் புத்தகத்திலிருந்து மூன்று வசனங்களை எடுத்துக் கொள்வோம். இவை, இருளான, கவலைகள் நிறைந்த அன்பில்லாத நம்முடைய உலகத்திலுள்ள மக்களை தேவ அன்பின் வெளிச்சத்திற்கு நாம் கொண்டு வரும் முயற்சியில் நம்மை ஆச்சரியப்படுத்துபவை.
-1 யோவான் 3:1-2 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. 2 பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
-1 யோவான் 3:9-11 தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. 11 பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.
– 1 யோவான் 5:2-4 2 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும் போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம். 3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்பு கூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. 4. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
ஏனெனில் அன்பு தானாக வரவேண்டும், வற்புறுத்தலின் பேரில் வரக்கூடாது. தேவன் தன் விருப்பப்படியே நம்மை நேசிப்பதைத் தெரிந்தெடுத்தார்! நாம் பிறக்கும்போதே பாவத்துடன் இருப்பதால் நாம் நேசிக்கப்படத்தக்கவர்கள் அல்லர், அதனால் நம்மைக் குறித்த அவருடைய மேன்மையான சிறந்த சித்தத்திற்கு மாறாக நாம் கலகம் செய்தோம். கலகக்காரரான நாம் பாவஞ்செய்து, நமக்கென்று அவர் வைத்திருக்கிற மதிப்புமிக்க சித்தத்தைப் புறக்கணித்தோம். (ஆதியாகமம் 3 ஐப் பார்க்கவும்).
நாம் அவரைப் புறக்கணித்தாலும், தேவன் நம்மை நேசித்தார், நாம் மீண்டும் அவருடன் உறவு கொள்வதற்கு ஒரு வழியை ஏற்படுத்தினார். அந்த ஒரே ஒரு வழி எது? எல்லா மனிதரிடமும் அவர் கேட்ட எளிய கேள்விக்குப் பதில் அளிப்பது நம் கடமை: “நீ என்னை நேசிக்கிறாயா?”. நீ என்னை நேசித்தால், என் குமாரனாகிய இயேசுவையும் நேசிப்பாய்.
எக்காலத்தும் பொருந்தக்கூடிய சிறந்த, எளிய சத்தியங்கள்: தேவன் உன்னை நேசிக்கிறார்! பதிலுக்கு நாமும் அவரை நேசிப்பதைத் தெரிந்துகொள்ளும் சுதந்தரத்தைத் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். அவர் நம்மிடம்: “நீ செய்தால்…. நான் செய்வேன்” என்று கூறுகிறார். நீ என் குமாரனாகிய இயேசுவை நேசித்தால், நான் உன்மேல் பொழியும் அன்பைப் பெறுவதற்கு நீ பதிலுக்கு என்னை நேசிப்பதற்கு நான் உனக்குப் புது ஆவியை உனக்குக் கொடுப்பேன்.
தேவன் நம்மேல் வைத்த அன்பின் பலவித வெளிப்பாடுகளைக் காண்போம்:
– யோவான் 3:16-17 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
– ரோமர் 5:8-9 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். 9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க கோபாக்கினைக்கு நீங்களாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சியமாமே.
இயேசு, தன் பிதாவிடமும் நம்மிடமும் வைத்திருந்த அன்பின் வெளிப்பாட்டைத் தெளிவாகக் கீழே காணலாம்.
– லூக்கா 22:41-42 அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் அப்புறம் போய், முழங்கால்படியிட்டு: 42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்த பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார்.
உண்மைக்கூற்று 1: “நீ என்னை நேசிக்கிறாயா?” என்று ஒவ்வோர் ஆணிடமும் பெண்ணிடமும் சிறுவனிடமும் சிறுமியிடமும் தேவன் கேட்கிறார்.
– மாற்கு 12:30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புகூறுவாயாக என்பதே பிரதான கற்பனை.
– யோவான் 13:34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
– யோவான் 21:17 மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா?” என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு, “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர்,” என்றான். இயேசு: “என் ஆடுகளை மேய்ப்பாயாக,” என்றார்.
உண்மைக்கூற்று 2: சிறு பிள்ளைகள் தங்கள் சுகவீனத்தில் தம் பெற்றோரிடம் அன்பு, கனிவு, கீழ்ப்படிதலுடன் நடந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல சர்வவல்லமையுள்ள தேவனின் பிள்ளைகள் மேற்கண்ட அதே தன்மைகளை மட்டுமே வெளிப்படுத்துவர்: அன்பு, கனிவு மற்றும் கீழ்படிதல்.
உண்மைக்கூற்று 3: நாம் இயேசுவை நேசித்தால், நாம் அவருக்குக் கீழ்ப்படிந்து, அவரைப் பின்பற்றுவோம்.
– யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
– யோவான் 14:21 “என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
உண்மைக்கூற்று 4: இரட்சிக்கும் விசுவாசம், இயேசு கிறிஸ்துவைக் குறித்த உண்மையை ஒருவன் நம்புகிறதைச் சார்ந்தது என்பதை நாம் முழுமையாக நம்புகிறோம். ஒருவன் இயேசுவைக் குறித்துக் கூறப்படுகிறதை நம்புகிறதும் இயேசுவைக் குறித்து கூறப்படும் பொய்யானவற்றை ஒதுக்குவதும் ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள மிக முக்கியமான தெரிந்தெடுப்பாகும்! ஏன்? பரலோகம் அல்லது நரகத்தில் ஒருவனின் நித்தியம், இதன் பதிலைச் சார்ந்துள்ளது.
ஒருவன், பின்வரும் உண்மையை தன் நித்திய வாழ்விற்கு விசுவாசித்து, நம்ப வேண்டும். “புதிதாய்ப் பிறக்கும்” அனுபவத்தில் ஒருவன் இயேசுவை நேசித்து அவர் வழிநடத்துதலின்படி அவரைப் பின்பற்ற ஒப்புக் கொடுக்க வேண்டும்.
• தேவ வார்த்தை முற்றிலும் உண்மை என நான் நம்புகிறேன்: மத்தேயு 1:20-23 “அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பணத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.
• 2000 ஆண்டுகளுக்கு முன்னர், எருசலேமுக்கு வெளியே கல்வாரி என்ற இடம் இருந்தது, அதில் மூன்று ஆண்கள் சிலுவையில் அறையப்பட்டனர்; இருவர் குற்றவாளிகள். இயேசு என்ற பெயரையுடையவர் குற்றம் எதுவுஞ்செய்யவில்லை என்று அறிவிக்கப்பட்ட பின்பும் மதத்தின் பெயரால் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை நான் நம்புகிறேன்.
• இயேசு என்ற பெயரையுடைய இம்மனிதன் அந்நாளில் நடுவேயுள்ள சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பதை நான் நம்புகிறேன்.
• இயேசு, தேவ குமாரன், தேவனால் அனுப்பப்பட்ட குறைவற்ற மனிதன் என்பதை நான் நம்புகிறேன்.
• இயேசு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார், பல நாட்கள் பலருக்குத் தரிசனமானார், பிதாவாகிய தேவனுடைய வலது பாரிசத்தில் உட்காரும்படி மேலே ஏறிச் சென்றார் என்பதை நான் நம்புகிறனே;.
• நான் குற்றவுணர்ச்சியுடைய பாவி, என்னுடைய நித்திய மரணத்திற்குக் காரணமான என் பாவத்திலிருந்து என்னை விடுவிக்க இயேசு எனக்குத் தேவை என்று நான் நம்புகிறேன்.
• பரலோகம் இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன்.
• என் மரணத்திற்குப் பின்னர், இயேசு என்னைப் பரலோகத்திற்குக் கூட்டிச் சென்று அவருடன் என்றென்றும் வாழச்செய்வார் என்பதை நான் நம்புகிறேன்.
– யோவான் 14:1-3 “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன், ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.”
– யோவான் 6:28-29 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்னசெய்ய வேண்டும் என்றார்கள். 29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார்.
– யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
– அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38 பேதுரு அவர்களை நோக்கி; நீங்கள் மனந்திரும்பி, ஒவ்nவொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
கிறிஸ்துவுக்குள் எங்கள் அனைவரின் அன்பும் உங்கள் அனைவருக்கும்