நல்ல தலைவன் தன் ஜனங்களுக்காக யுத்தம் செய்ய வேண்டும். தேவன் எதற்காக மரிக்க வேண்டும், ஏன் மரணத்தால் நான் உன்னை இரட்சித்தேன் என்று என்னிடம் கூற வேண்டும்?
பதில்: அன்பான புது நண்பரே, “நல்ல தலைவன் தன் ஜனங்களுக்காக யுத்தம் செய்ய வேண்டும்” என்று நீ கூறினால் நீ மிகவும் சரியாகச் சொன்னாய்.
இயல்பாகத் தோன்றுகிற மற்றொரு பதிலுடன் கூடிய கேள்வியை உருவாக்குவதன் மூலம் நாம் ஒன்று சேர்ந்து உங்கள் கேள்வி, பதிலுக்கு முடிவு காண்போம்: எதிரி படையைத் தோற்கடிப்பதற்கு தேவையானவற்றைச் சிந்திக்காமல் தன் சொந்த ஜனங்களுக்கும் தன் படைகளுக்கும் முடிந்தவரை இழப்பைக் குறைப்பதற்கும் யோசிக்காமல் ஒரு தளபதி இருப்பது அதிக முட்டாள்தனம் அல்லவா?
ஒரு யுத்தத் திட்டத்தைத் தீர்மானிக்காமல் யுத்தத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான இழப்பு குறித்து யோசிக்காமல் எந்த ராணுவத் தளபதி யுத்தத்திற்குப் போவான்?
உங்களுடைய என்னுடைய மிகப்பெரிய எதிரி மரணம். இந்த எதிரியிடமிருந்து ஒருவனும் தப்பிக்க முடியாது. இரு விதமான மரணங்கள் மனிதனுக்கு உண்டு என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
- தப்ப முடியாத உடல் சார்ந்த மரணம். 2. உடல் சார்ந்த மரணத்திற்குப் பின் நிகழும் ஆத்துமாவின் நித்திய மரணம். ஆத்துமாவின் நித்திய மரணத்திற்கு தப்பிக்க முடியும். ஏனெனில் தம்மை விசுவாசிக்கிற மற்றும் நேசிக்கிறவர்களுக்காக எல்லாத் தலைவர்களிலும் மிகப்பெரிய தலைவர் நம் ஸ்தானத்தில் நமக்காக மரித்தார்.
- சிருஷ்டிகராகிய பரிசுத்த தேவன் தன் சிருஷ்டிகளுக்கு “சுய விருப்பம்” என்ற ஒரு தெரிவைக் கொடுத்திருக்கிறார், இதனால் அவர்கள் தங்கள் சிருஷ்டிகரை நேசிப்பதைத் தங்கள் விருப்பப்படி தெரிந்தெடுக்கலாம். அதே நேரத்தில், தன் சிருஷ்டிகளில் பலர் தேவனை விட சுயத்தை நேசிப்பதையே தெரிந்தெடுத்துள்ளனர் என்பதையும் தேவன் புரிந்து கொண்டுள்ளார். சுயத்தை நேசித்ததால் அவர்கள், தேவனை வெறுத்தனர். அதன்பின், அவருடைய அன்பின் கட்டளைகளுக்கும் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பிலும் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பிலும் கலகம் செய்தனர்.
சிருஷ்டிகரான, முதன்மையானவரான ஞானம் நிறைந்த தேவன், மரணம் தான் மனிதனின் மிகப்பெரிய எதிரி, மிகப் பெரிய பயம் என்பதை நன்கு அறிந்திருந்தார். மேலும் மரணத்தை வெல்வதற்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது என்பதையும் அவர் முழுமையாக அறிந்தவர். அந்த ஒரே ஒரு வழி என்னவெனில் அவர் நம் மேல் வைத்த முழுமையான அன்பினால் தன்னையே மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தது தான். இதனால் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறவர்களுக்கு மரணம் என்றென்றும் தோற்கடிக்கப்பட்டது.
பின்வரும் முடிவுகளை எதிர்கொள்ளும் வேளையில் ராணுவத்தளபதி தியாகத்தைத் தெரிவு செய்ய முடியுமா: உன்னுடைய திரள்கோடி மக்களுக்காக நீ மரிக்க வேண்டும் அல்லது நீ இன்னும் சில ஆண்டுகள் வாழ வேண்டுமானால் உன்னுடைய திரள்கோடி மக்கள் என்றென்றுமாக இறக்க வேண்டுமா? ஒரே ஒரு தலைவர் தான் இதைச் செய்தார், அவர் உன்னையும் என்னையும் முழுமையாக நேசிக்கிற இயேசு கிறிஸ்து!
யோவான் 15:13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.
I கொரிந்தியர் 15:26 பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.
மிகச் சிறந்த இத்தலைவர் தன்னுடைய ஜனங்களை இரண்டாம் மரணத்தினின்று காப்பாற்றுகிறார் என்பதை முக்கியப்படுத்தக்கூடிய உங்கள் கேள்வி, மிகச்சிறந்த ஒன்று. தேவனை விட்டுப் பிரிந்த ஆத்துமாவின் மரணம் என்றென்றும் வேதனையையும் பெரும் துயரத்தையும் அனுபவிக்கும்.
குறைவில்லாத முழு மனிதனான இயேசு கிறிஸ்து நித்திய மரணத்தினின்று பலரை விடுவிக்கும்படித் தான் மரிப்பதைத் தெரிந்து கொண்டார். இச்செய்தியைத் தெரிந்து கொண்ட நீங்கள் தனிப்பட்ட முறையில் என்ன செய்யப் போகிறீர்கள்? என்பது அடுத்த விவாதத்திற்குரிய கேள்வியாகும். உனக்காக மரித்த ஒருவருடன் என்றென்றும் சந்தோஷத்துடன் வாழும்படி அவரை நேசித்து அவரை ஆராதிப்பதை தெரிந்து கொள்வாயா?
நீங்கள் என் பதிலை வாசிக்கும் பொழுது, உங்கள் இருதயத்தில் ஏதோ ஒரு தூண்டுதல் ஏற்பட்டால் எங்களின் பின்வரும் இணைப்பை சொடுக்குங்கள். 3 சிலுவைகள்… குற்றவாளிகள் 2 நபர் மட்டும். இந்த ஒளிப்படத்தில் மேற்கண்ட சத்தியங்கள் மிகுந்த அன்புடன் விளக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். வேதாகமத்தில் உள்ள இவ்வசனங்களின் மூலம் உங்கள் கேள்விக்குப் பதிலை வெளிப்படுத்தும்படிப் பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது உங்களுடன் பேசுகிறார்: தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து ஏன் மரிக்க வேண்டும், அவர் எனக்காக மரித்தார் என்பதை ஏன் என்னிடம் கூற வேண்டும்?
அவர் இறந்ததன் காரணம், அந்த மரணத்தினால் மட்டுமே, மனிதனின் மிகப்பெரிய எதிரி தோற்கடிக்கப்பட முடியும்.
தேவனின் அன்பு- http://vimeo.com/912288970.
இந்த ஒளிப்படத்தை நீங்கள் பார்க்கும் பொழுது உங்களுக்கு உற்சாகம் ஏற்பட்டால் எங்களுக்கு எழுதுங்கள், ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் பார்க்கும் பொழுது உங்கள் மனதில் என்ன தோன்றியது என்பதை எங்களிடம் கூறுங்கள்.
இன்னுமறிய கீழ்க்கண்ட ஒளிப்படங்களை பாருங்கள்.
எங்களுக்கு எழுதுங்கள்.