நான் ஒரு முஸ்லிம் மனிதனை காதலித்தேன், இப்போது அவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் எங்கிருந்து தொடங்க வேண்டும்?
நித்திய உண்மை: நீங்கள் யாரை நேசிக்கிறீர்கள் என்பது எந்தவொரு நபரும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான கேள்வி. மற்ற எல்லா அன்பர்களையும் விட நீங்கள் யாரை அதிகமாக நேசிக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் நித்தியத்தை எங்கே செலவிடுவீர்கள் என்பதை தீர்மானிக்கும்!
முதல் மற்றும் மிக முக்கியமான நேசத்திற்கான கேள்வி: நீங்கள் தனிப்பட்ட முறையில் இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவை உங்கள் ஆண்டவராகவும், இரட்சகராகவும், நண்பராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் நீங்கள் “மறுபடியும் பிறந்த” கடவுளின் பிள்ளையாகிவிட்டீர்களா? பரிசுத்த தேவனுக்கும் மற்ற ஜனங்களுக்கும் எதிரான உங்கள் பாவங்களுக்காக மரண தண்டனையைச் செலுத்த பரலோகத்திலிருந்து வந்த தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் தேவனை உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொண்டு, பரிசுத்த வேதாகமம் கூறும் சத்தியப் பாதையில் இயேசு உங்களை எங்கு அழைத்துச் சென்றாலும் அவரைப் பின்பற்ற நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறார்ககளா?
மற்ற அன்பை விட இயேசு மீதான அன்பு ஏன் முக்கியமானது?
பதில்: நாம் மற்ற எல்லா அன்பையும் விட இயேசுவை மிக அதிகமாக நேசிக்கும்போது, தேவனையும், நம் அயலகத்தாரையும் எப்படி நேசிக்க வேண்டுமோ அப்படி நேசிக்க இயேசு கிறிஸ்துவின் அன்பு நமக்கு கொடுக்கப்படுகிறது. அது சுயநலம் மிகுந்த அன்பு அல்ல, மாறாக இயற்கைக்கு அப்பாற்பட்ட அன்புடன் அவர்களுக்கு இப்போதும் என்றென்றும் சிறந்ததை விரும்பும் அன்பு.
I யோவான் 4 : 17-19 நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
இயேசு நம்மீது தனது தெய்வீக, இயற்கைக்கு அப்பாற்பட்ட, பரிபூரண அன்பை எவ்வாறு காட்டினார்? அவர் நமக்காக மரித்தார்! இயேசு தம்முடைய ஜீவனை கொடுத்ததின் மூலம், தம்முடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தினார், நம்மை அன்பினால் இரட்சித்து, தேவனுடைய பிள்ளைகளாகவும், அவருடன் என்றென்றும் வசிக்கும் குடும்ப உறுப்பினராகவும் நம்மை மீண்டும் பரிசுத்த தேவனிடம் கொண்டு வந்தார். தேவனுக்கும் நம் அயலகத்தாருக்கும் எதிராக நாம் செய்த பாவங்களுக்காக நாம் பெற வேண்டிய மரண தண்டனையைச் செலுத்தி இயேசு நம்முடைய இடத்திலே மரித்தார்.
யோவான் 3 :16-18 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
யோவான் 1:12-13 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.
நீங்கள் யார் என்பதையும், இயேசுவுக்குச் சொந்தமான அனைத்தையும், அவர் உங்கள் கைகளில் கொடுத்திருக்கும் அனைத்தையும் நீங்கள் திருப்பிக் கொடுப்பீர்களானால், தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் உங்கள் இதயத்தில் “இயற்கைக்கு அப்பாற்பட்ட/உன்னதமான அன்பை” வைத்திருப்பதால் நீங்கள் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
இயேசுவின் மீது இயற்கைக்கு அப்பாற்பட்ட/உன்னதமான அன்புடன், இயேசு நேசிக்கும் அதே வகையான அன்புடன் நீங்கள் இப்போது மற்றவர்களை நேசிக்க முடியும்.
அனைத்து மக்களுக்கும் இயேசுவின் இயற்கைக்கு அப்பாற்பட்ட அன்பு: யோவான் 15: 12-14 நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.
இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காத அல்லது அவரை தனது இரட்சகராக நேசிக்காத ஒரு மனிதனிடம் நீங்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த இயல்பான ஆசை குறித்த உங்கள் உண்மையான மற்றும் முக்கியமான கேள்விக்கு இது எவ்வாறு பொருந்தும்?
நாம் இயேசு கிறிஸ்துவை மற்ற எல்லா அன்பிற்கும் மேலாக நேசிக்கும்போது, அவர் கட்டளையிடுவதைச் செய்ய விரும்புவோம், மேலும் அவ்வாறு செய்வதற்கான வல்லமையைப் பெறுவோம்.
இயேசு தம்முடைய பரிசுத்த ஆவியினால், நம் அயலகத்தாரை எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கான ஏவப்பட்ட வார்த்தைகளை எழுத்து வடிவில் விட்டுச் சென்றார். இயேசு அவர்களை நேசிப்பது போல நாமும் அவர்களை நேசிக்க முடியும். ஏனென்றால், இந்த வாழ்க்கையிலும் அடுத்த நித்திய வாழ்க்கையிலும் அவர்களுக்கு மிகச் சிறந்ததையே நினைக்க விரும்புகிறோம்.
மனித இதயம்/உணர்ச்சிகள் நம் ஒவ்வொரு முடிவையும் வாழ்க்கையின் ஒவ்வொரு நடையையும் மிகவும் வலுவாக பாதிக்கும் என்பதால், தூய்மையற்ற அல்லது ஆசீர்வாதமற்ற உறவுகளைப் பின்தொடர்வதில் தவறு மற்றும் துன்பத்தில் விழாதபடி நம் இதயங்களை எல்லாக் காவலோடும் பாதுகாக்க அறிவுறுத்தப்படுகிறோம்.
நீதிமொழிகள் 4 :23. எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
உங்கள் பாதுகாப்பிற்காகவும், நித்திய நலனுக்காகவும், உங்களை தம்முடைய நேசத்தால் அழைத்தவருக்கு சாட்சியாகவும், இயேசு கிறிஸ்துவின் மீது உங்களுக்குள்ள அன்பைப் பகிர்ந்து கொள்ளாத ஒருவருடன் உங்களின் அன்பின் உறவைத் தொடர வேண்டாம் என்று பரிசுத்த ஆவியானவர் எச்சரித்துள்ளார்.
சாத்தியமான திருமணங்கள் அல்லது வியாபார கூட்டணிகளைப் குறித்து பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவர்களுக்கு என்ன கட்டளையிடுகிறார்?
II கொரிந்தியர் 6:14-15 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
எங்கள் வாழ்க்கையில் நடந்த நடைமுறை சம்பவம் : என் மனைவியாகிய பிலிஸும் நானும் முதன்முதலில் சந்தித்து எங்கள் காதலை பகிர்ந்து கொண்ட போது, நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கக் தொடங்குவதற்கு முன்பாக கீழ் வரும் உரையாடல் எங்களிடத்தில் நடந்தது.
ஜான்: “பிலிஸ், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், அதன் அர்த்தம் என்ன என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? இன்றுவரை நாம் தொடர்ந்து பழகுவதற்கு முன், நான் ஒரு விஷயத்தை மிகவும் தெளிவுபடுத்த வேண்டும். தயவுசெய்து நான் சொல்றதைக் கேளுங்க, ஒருவேளை அது மிகவும் வித்தியாசமா தெரியலாம், ஆனால் நான் சொல்லப் போகிறது மிகவும் முக்கியமான காரியம்.
“பிலிஸ், நீ என் வாழ்க்கையில் ஒருபோதும் முதன்மையான நேசமாக இருக்க முடியாது. நிச்சயமாக, நீ என் இரண்டாவது மிக முக்கியமான நேசமாக இருப்பாய். ஏனென்றால் எல்லா மனிதர்களும் முதன்மையாகவும், முக்கியமாகவும், முழு இருதயத்தோடு தேவனை நேசிக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறோம். அந்த அன்பு நம் இதயங்களில் உண்மையான அன்பாகப் பிறக்கும்போதுதான், நாம் நேசிக்கப்படுவதற்குத் தகுதியானவராகவும், ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் நேசிக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டபடி உன்னை நேசிக்க “இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை” எனக்கு கொடுக்கப்படும்.
“இயேசு கிறிஸ்துவை ஒருவருக்கொருவர் மேலாக நேசிப்பவர்கள் மட்டுமே பரிசுத்த திருமணத்திலும் குழந்தைகளை வளர்ப்பதிலும் ஒருவரையொருவர் ஊக்குவிக்கவும் கட்டியெழுப்பவும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அன்பைக் கொண்டிருப்பார்கள்.
“முதலில் நாம் இயேசு கிறிஸ்துவை மிக உன்னதமாக
நேசிப்பதில் ஒன்றுபட வேண்டும் என்று கூறினேன். எங்கள் சந்திப்பின் உறவுக்கான அந்த அஸ்திவாரத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், அப்போதுதான் நாங்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்து நேசிப்பது பாதுகாப்பாக இருக்கும்.”
50 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சந்தித்து, எங்கள் நேசத்தை பகிர்ந்து கொண்டு,திருமணம் செய்து கொள்வதற்கு முன், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முதன்மையாக நேசிக்க வேண்டும் என்ற உடன்படிக்கையில் பிலிஸும் நானும் மிகவும் நன்றியுள்ள இதயங்களுடன் ஒன்றாக நுழைந்தோம்.
உங்களுடைய சிறந்த கேள்வி: நான் எங்கு தொடங்க வேண்டும்?
பதில்: மற்ற எல்லா அன்பிற்கும் மேலாய் இயேசுவை நேசிப்பதா என்ற கேள்வியை உங்கள் இதயத்தில் தெளிவாக உணர்ந்த பிறகு, இந்த பூமியில் உங்களை நேசிக்கும் மனிதருக்கு எங்கள் வீடியோக்களை மின்னணு முறையில் அனுப்பலாம். அதன் பிறகு, பரிசுத்த ஆவியின் கட்டளைக்கு கீழ்ப்படியாத அபாயத்தைத் தவிர்க்கவும், ஒரு அவிசுவாசியுடன் சமமாக இணைக்கப்படுவதற்கும்,உங்களுடைய பாதுகாப்பிற்காகவும், உடனடியாக உங்களுடைய தொடர்பைத் துண்டித்து, உங்கள் எதிர்காலத்தையும் உங்கள் நண்பரின் எதிர்காலத்தையும் பரிசுத்த ஆவியின் கைகளில் விட்டுவிடுவதாகும். பரிசுத்த ஆவியானவர் எப்போதும் இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பும் எந்தவொரு நபரையும் ஆசீர்வதிப்பார். உங்கள் நண்பரும் இயேசு கிறிஸ்துவை நம்பிக்கையோடே விசுவாசித்து, பின்பற்றுவதற்கு வந்தால், உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் மிகச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை பரிசுத்த ஆவியானவர் பொறுப்பேற்பார்.
பரிசுத்த ஆவியானவரின் கைகளில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவருடைய வழிநடத்துதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நீங்கள் தினமும் ஜெபிக்கும்போது, உங்களுக்கு எது சிறந்ததோ அதை பெற்றுக் கொள்ளும்படி, உங்கள் எதிர்காலத்தையும், நீங்கள் நேசித்த மனிதனின் எதிர்காலத்தையும், இயேசுவின் கைகளில் ஒப்படைத்து விடுங்கள்.
I சாமுவேல் 2 :30 இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அன்புள்ள நண்பரே, நீங்கள் இப்போது பார்க்கிறபடி, நீங்கள் யாரை நேசிக்கிறீர்கள் என்பது நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான முடிவு, அது உங்கள் நித்திய விதியை தீர்மானிக்கிறது.
“சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா” என்ற தலைப்பில் தேவனின் அன்பை பற்றிய விளக்கத்தை கொடுக்கும் கட்டுரையை நாங்கள் இங்கே எழுதி இணைத்துள்ளோம்.
இந்த ஆய்வறிக்கையைப் படிக்க நீங்கள் “தனியாக” சிறிது நேரம் ஒதுக்குவீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் படிக்கும்போது, இயேசு கிறிஸ்து உங்களை நேசித்தது போல நீங்கள் மற்றவர்களை நேசிக்க இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியை உங்களுக்கு கொடுக்குமாறு ஜெபியுங்கள்.
யோவான் 14 :20-21 நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
மாற்கு 12 :30-31 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
மத்தேயு 10: 37-38 தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
தயவுசெய்து இணைக்கப்பட்டுள்ள எங்கள் வீடியோக்களைக் பார்க்கவும், அவை உங்கள் விருப்பத்திற்கு உதவக்கூடும்:
அன்புசெய்ய வேண்டும் என்று கட்டளையிட முடியுமா? https://www.facebook.com/wasitforme.tamil/videos/420120857352964/
பிதாவாகிய தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பையும், இயேசு கிறிஸ்துவை நம்பிக்கையோடே விசுவாசித்து, பின்பற்றுவதன் மூலம் தேவனின் அன்பை நாம் எவ்வாறு திருப்பித் தருகிறோம் என்பதையும் புரிந்து கொள்ள பின்வரும் வீடியோக்கள் நமக்கு உதவி செய்யும்.
தேவனுடைய அன்பு –
“நீங்கள் விசுவாசிப்பீர்களா?”-
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை முற்றிலும் நேசிக்கிறார், ஆகையால் நாங்களும் உங்களை நேசிக்கிறோம்!
கிறிஸ்து இயேசுவுக்குள்ளான எங்களுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக.
ஜான் + பிலிஸ் + நண்பர்கள் @WasItForMe.com

