இயற்கை பிறப்பு போன்று, “புது ஆவிக்குரிய சிருஷ்டி” என்பது பரிசுத்த ஆவியினால் ஒருவரின் உள்ளத்தில் ஏற்படும் மாற்றமாகும்.
2 கொரிந்தியர் 5:17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்வுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
யோவான் 16:7-9 7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். 8 அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணரத்துவார். 9 அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக் குறித்தும்,..
பின்வருவனவற்றின் மூலம் பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மைகளை அறிவிக்கிறார்:
படைத்தல் (ரோமர் 1:20-21) எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும். ஆதலால் அவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
மனசாட்சி (ரோமர் 2:15-16) அவர்களுடைய மனசாட்சியும் கூட சாட்சியிடுகிறதினாலும்…நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.
என் சுவிNசுஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக் குறித்து நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
தேவவார்த்தையைப் பேசுதல் மற்றும் எழுதுதல் (ரோமர் 10:15-18) அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக் குறித்து ஏசாயா: கரத்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன், கேள்விப்பட்டார்கள், அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.
தேவனுடைய பரிசுத்த ஆவி, நம்முடைய இருளின் மேல் சத்தியத்தின் ஒளியைப் பிரகாசிப்பித்தது, அன்பைக் குறித்த தேவனின் பரிசுத்த கற்பனையை நாம் மீறினோம் என்று பாவம் நிறைந்த இருதயங்களில் குற்ற உணர்வு ஏற்பட்டது. மாற்கு 12:29-31 29 இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. 31 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே: இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.
நம் மீறுதலையும் குற்ற உணர்வையும் நாம் உணர்ந்தவுடன் நாம் “எனக்கு ஓர் இரட்சகர் தேவை, நான் இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கதறுவோம். அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:29-31 29 அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, 30 அவர்களை வெளியே அழைத்து வந்து; ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். 31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
இங்கே பரிசுத்த ஆவியானவர், தன் வசனங்களின் மூலம் “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்” என்று கூறுகிறார்.
இப்பொழுது, இதைக் கேட்கிறவன் சிறைச்சாலைக்காரன் போல் செயலாற்ற வேண்டும்.
அப்போஸ்தலர் நடபடிகள் 16:33-34 33 மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். 34 பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டுபோய், அவர்களுக்கு போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான். அல்லது யோவான் 6 இல் கூறப்பட்டுள்ளபடி அவர்கள் இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் போலச் செயல்படலாம்.
-யோவான் 6:63-69 63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது. நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. 64 ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார், விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: 65 ஒருவன் என் பிதாவின் அருளைப்பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார். 66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனே கூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள். 67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். 68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. 69 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
கிறிஸ்துவின் ஆவி உள்ளத்தில் பிறந்துவிட்டது. “புதிதாய்ப் பிறந்த ஒருவன்” முன்பதாக தேவனுக்கு விரோதமாகக் கலகஞ்செய்தவன், கிறிஸ்துவை ஏற்க மறுத்தவன், இப்பொழுதோ தேவனுடைய அன்பின் பரிசுத்த கற்பனையைத் தேவனிடத்திலும் தன் அயலாரிடத்திலும் நிறைவேற்றும் வல்லமையை பெற்றிருக்கிறான். பிறரால் கொடுக்கமுடியாத சந்தோஷத்தை “மறுபடி பிறத்தல்” கொடுக்கும், பிறரிடம் இதைக் குறித்துக் கூற விரும்பும்:
2 கொரிந்தியர் 5:20 ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக் கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.
“புதிதாய்ப் பிறந்தவன்” பவுலைப் போல தங்கள் நன்றியைக் கூறத் தொடங்கலாம்:
1 தீமோத்தேயு 1:12-14 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமைசெய்கிறவனுமாயிருந்தேன். அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம் பெற்றேன். நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று.