பதில்: வேதத்தை நீங்கள் திறக்கும் முன் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவேண்டும். வேதம் நமது ஆசீர்வாதத்திற்காகக் கொடுக்கப்பட்ட, பிழையற்ற, தவறாத தேவனுடைய வார்த்தை என்று விசுவாசித்து அதை உங்கள் தனிப்பட்டப் புரிந்துகொள்ளுதலின்படி அறிக்கையிடுங்கள்.
ஒவ்வொரு காலையும், நீங்கள் எழுந்தவுடன், பின்வரும் தேவவார்த்தையைப் பற்றிய உறுதிமொழிகளும், நீங்கள் வேதத்தை வாசிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் அதன் அர்த்தத்தை உங்களுக்கு வெளிப்படுத்தும்படியான ஜெபமும் உங்கள் முதல் சிந்தனைகளாக இருக்கட்டும்.
வேதத்தில் இருக்கும் தேவனுடைய சத்தியங்களின்மேல் உங்களுக்கு இருக்கும் முழுநம்பிக்கையை அறிக்கைசெய்து தொடங்குங்கள் – எபிரெயர் 6:18 “எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன்”
அடுத்ததாக, பின்வரும் வசனங்களின் உண்மையை இன்றும், இனிவரும் ஒவ்வொரு நாளும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் எடுத்துக்காட்டும்படி ஜெபியுங்கள்:
- 2 தீமோத்தேயு 3:16-17 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
- லூக்கா 11:11-13 உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.
- சங்கீதம் 43:3 உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்! அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.
- யோவான் 14: 16-17 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
[வேதத்தில் இரண்டுமுறை சொல்லப்படும் எந்தக் காரியமும் அளவிடப்படமுடியாத மதிப்புள்ள உண்மையாகும். இயேசு அதே உரையாடலில் இந்த உண்மையை மீண்டும் கூறுகிறார்,]
- யோவான் 16: 13-15 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.
[பரலோகத்திலிருந்து தினமும் புதிய உணவிற்கான நமது தேவை: யாத்திராகமம் 16:4- 5 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார்].
இப்பொழுது முழு உறுதியுடனும், மகிழ்ச்சியுடனும் “வானத்திலுருந்து புதிய மன்னா” கிடைக்கும்படியான ஜெபத்துடன் உங்கள் வேதத்தைத் திறந்து, பரிசுத்த ஆவியானவர் அன்றைய தினத்திற்கு உங்களுக்கு அருளிய வேத பகுதியை வாசியுங்கள்.
வேதத்தை வாசிக்கும்பொழுது, வழக்கமாக வேதவசனத்தின்மேல் உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஆர்வம் நீங்கள் வாசிக்கும் பகுதியின்மேல் இல்லாதது போல உணர்ந்தால், வாசிப்பதை நிறுத்திவிட்டு, கீழ்க்கண்டவற்றில் ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ செய்யுங்கள்.
- “பேராச்சரியம் மீண்டேன் நான்”அல்லது “நான் பாவிதான்”
போன்ற உங்களுக்கு விருப்பமான பாமாலைப் பாடல்
ஒன்றை வாசியுங்கள் அல்லது பாடுங்கள்.
- உங்கள் “மறுபிறப்பு” அனுபவத்தின்போது தேவனுடைய
இராஜ்ஜியத்தின் வாசலான உங்கள் “நான்
விசுவாசிக்கிறேன்” விசுவாச அறிக்கை பட்டியலை
மீண்டும் ஒரு முறை வாசியுங்கள்.
- யோசபாத் [2 நாளாகமம் 20:21] எப்படி யுத்தத்திற்கு
போர்வீரர்களுக்கு முன்னே பாடகர்களை அனுப்பினான்
என்பதை மீண்டும் வாசியுங்கள். நீங்கள் ஒரு யுத்தத்தில்
இருக்கிறீர்கள் என்றும், அதில் உலகம், மாம்சம் மற்றும்
சாத்தான் எல்லாம் சேர்ந்து, இயேசுவின் விலைமதிப்பற்ற
வார்த்தைகளை வாசித்து அவரிடம் நீங்கள் நெருங்கிச்
சேர்வதைத் தடுக்க எல்லா முயற்சியையும் செய்வார்கள்
என்றும் நினைவில் வைத்திருங்கள். இந்த யுத்தத்தில்
வெற்றிகாண மிகச் சிறந்த வழி, இயேசுவின் அருமையைப்
பற்றியும், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய தேவனைத்
துதித்தும் பாடுவதே.